tamilnadu

img

தியாகிகள் - தலைவர்கள் நினைவிடத்தில் சிபிஎம் வேட்பாளர்கள் அஞ்சலி!

தியாகிகள் - தலைவர்கள் நினைவிடத்தில் சிபிஎம் வேட்பாளர்கள் அஞ்சலி!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டி. லதா, தமது தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக, தியாக பூமியாம் வெண்மணி நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் வி.பி. நாகை மாலி எம்எல்ஏ, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. சுப்பிரமணியன், பி. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். செல்லசுவாமி, குமரி மாவட்ட மக்களின் தலைவர்களாக வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் முன்னோடிகள் தோழர்கள் ஜி.எஸ். மணி, டி. மணி, ஜே. ஹேமச்சந்திரன், பி. திவாகரன், பி. பெருமாள் ஆகியோரது நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினார்.