states

img

வீதிகள் தோறும் சமையல் எரிவாயு, பக்கோடா சுவரோவியங்கள் மேற்கு வங்கத்தில் படாதபாடு படும் மோடி, அமித் ஷா

வீதிகள் தோறும் சமையல் எரிவாயு, பக்கோடா சுவரோவியங்கள் மேற்கு வங்கத்தில் படாதபாடு படும் மோடி, அமித் ஷா

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் சுவரோவியங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண் டிங் உடன் வைரலாகி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா  உள்ளிட்ட பாஜகவினர் சுவரோவி யங்களில் எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுக்கப்பட்டு வருகின்ற னர். வேலைவாய்ப்பு இல்லை மிதா பாக் பகுதியில் உள்ள  சுவரில், சாலையோரக் கடையில் கொதிக்கும் எண்ணெய்களில் பக்கோடா சுட்டு, அதனை பொட்ட லம் கட்டி வாடிக்கையாளர்க ளுக்கு விற்கும் ஓவியம் வரையப் பட்டுள்ளது. இது மோடி ஆட்சியில் நிலவும் வேலையின்மையைக் குறிக்கிறது. பிரதமர் மோடி தான் முன்பு, பட்டதாரி இளைஞர்களை பக்கோடா சுட்டு பிழைக்கச் சொன் னார். இதனை குறிப்பிட்ட மிதா பாக் பகுதியில் சுவரோவியம் வரை யப்பட்டுள்ளது. சிலிண்டர் மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் சிலிண்டர் தட்டுப்பாடு, சிலிண்டர் விலை உயர்வு ஆகிய வற்றை குறிக்கும் வகையிலும், மோடி மற்றும் அமித் ஷாவை பொது மக்கள் விரட்டும் வகையிலும்  சுவரோவியம் வரையப்பட்டுள் ளன. இந்த சுவரோவியத்தில் சிலிண்டர் வண்டியை பிரதமர் மோடி ஓட்ட, அமித் ஷா பின்னால் உள்ளார். அதே போல பார்த்தா ஹசாரி பகுதியில் பெண்களுடன் சேர்ந்து ‘அம்மியில்’ மசாலா அரைத்தார். மற்றொரு வீட்டில் சமையல் எரி வாயு தீர்ந்துவிட்டதை அறிந்து, விறகு அடுப்பில் ரொட்டி சுட்டுக்  கொடுக்கும் வகையில் சுவரோவி யம் வரையப்பட்டுள்ளன. சுவ ரோவியங்கள் அனைத்தும் எந்த கட்சிகள் வரைந்தன என்பது தொ டர்பான தகவல் இல்லை. ஆனால் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா  உள்ளிட்ட பாஜகவினர் சுவரிலும் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் (சுவரோ வியம் படம்) வறுபட்டு வருகின்ற னர் என்பது குறிப்பிடத்தக்கது.