மனித உரிமைகளைப் பறிக்கும் மாற்றுப் பாலினத்தவர் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுதில்லி ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ‘மாற்றுப்பாலி னத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026’ (The Transgender Persons Amendment Bill, 2026) கடும் எதிர்ப்புகளுக்கும் அமளிகளுக்கும் மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா மனித உரிமை களுக்கும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு குற்றம்சாட்டியுள்ளன.
குறிப்பாக, மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ், திமுக எம்பி திருச்சி சிவா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே ஆகியோர் ஆற்றிய உரைகள், மாற்றுப்பாலினத்தவர் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்கான ஒரு முழக்கமாக அமைந்தன. இது ஒரு கருப்பு தினம்: ஜான் பிரிட்டாஸ் முழக்கம் மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய சிபிஐ(எம்) எம்பி டாக்டர் ஜான் பிரிட்டாஸ், மோடி அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை யைக் கடுமையாகச் சாடினார். “இது மாற்றுப் பாலினத்தவர் உரிமை பற்றியது மட்டு மல்ல, ஒட்டுமொத்த மனித உரிமைகள் தொடர் பானது.
இது ஒரு கருப்பு தினம்! நம்மை ஒரு முழு நூற்றாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு சோகமான பின்னடைவு இது. உலகம் முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட நாடுகள் விளிம்புநிலை மக்களை அரவணைத்து உள்ளடக்கிய சமூகமாக மாறி வரும் வேளை யில், நாம் ஏன் விலக்கி வைக்கும் மற்றும் கட்டுப் பாடுகள் விதிக்கும் சட்டங்களை உருவாக்கி பின்னோக்கிச் செல்கிறோம்?” என்று கேள்வி எழுப்பினார்.
ஒன்றிய அரசின் உள்நோக்கங்களை அம்பலப்படுத்திய அவர், பிரதமர் மோடியின் பழைய உரையைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி னார். “தற்போதுள்ள சட்டமே கண்ணியமாக வாழ்வதற்கான கேடயம் என்று பிரதமர் கூறினார். இப்போது திடீரென்று என்ன மாறி விட்டது? இந்த அரசாங்கம் இந்த மசோதா வைக் கொண்டு வரத் தூண்டியது எது? இதில் இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரி கின்றன. ஒன்று, பிராமணீய மதவாத கண்ணோட்டம் இந்த நாட்டின் மீது திணிக்கப் படுகிறது. இரண்டாவது, நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சரின் பேச்சு காட்டுவது போல, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை இவர்கள் மதிப்பதே இல்லை!” என்றார்.
உச்சநீதிமன்றப் பரிந்துரை புறக்கணிப்பும் ‘அதிகாரப் பகிர்வு’ மீறலும் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட குழு, இந்தச் சட்டத் திருத்த நடவடிக்கை களைத் தொடர வேண்டாம் என்று அரசுக்கு அறிவுறுத்தியது. “உச்சநீதிமன்றக் குழுவின் கோரிக்கையை இந்த அரசு ஏன் பரிசீலிக்க வில்லை? நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கேட்கிறார்: ‘உச்சநீதிமன்றம் யார்? நீதிபதிகள் யார்? நாம் தான் ஆட்சி செய்வோம், சட்டம் இயற்றுவோம்’ என்கிறார்.
முன்னாள் சட்ட அமைச்சராக இருந்த ஒருவருக்கு ‘நீதி மன்ற மறுஆய்வு’ (Judicial Review) அதி காரம் பற்றித் தெரியாதா? இந்திய அரசிய லமைப்புச் சட்டம் வகுத்துள்ள அதிகாரப் பகிர்வை (Separation of Powers) நான் ஆதரித்துப் பேசுகிறேன்” என்று பிரிட்டாஸ் ஆவேசமாக முழங்கினார். மேலும் சுய-அடையாள உரிமையை (Self-perceived identification) நீக்கி விட்டு, கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு மாற்றுப்பாலினத்தவர்களை உட்படுத்து வதைக் கண்டித்த அவர், “வாக்காளர் பட்டியலில் உள்ள 48,000 மாற்றுப்பாலினத்தவர் களும் இத்தகைய அதிர்ச்சிகரமான மருத்துவப் பரிசோதனைக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பு கிறீர்களா? இது தனிமனித கண்ணியத்திற்கும் தனியுரிமைக்கும் எதிரானது அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில இடது ஜனநாயக முன்னணியின் (LDF) கொள்கை களை முன்மாதிரியாகக் குறிப்பிட்ட அவர், “மாண்புமிகு அமைச்சர் அவர்களே, உங்களுக்குச் சிறு அளவிலேனும் உணர்திறன் இருந்தால் கேரளம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகளின் கொள்கைகளைப் பாருங்கள்.
மாற்றுப்பாலினத்தவர்களுக்குப் பென்ஷன், வேலைவாய்ப்பு, கல்வி உதவி, இலவச வீட்டு வசதி மற்றும் சுகாதார உதவிகள் எனப் பல உள்ளடக்கிய திட்டங்களை இடதுசாரி அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார். விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதிகளுடன் எந்த ஒரு கலந்தாலோசனையும் நடத்தாமல், அவசர அவசரமாகப் புல்டோசர் கொண்டு இடிப்பது போல இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்றும், இதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகளின் கண்டனம் ஜான் பிரிட்டாஸின் முழக்கத்தைத் தொட ர்ந்து, திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவை யில் ஒன்றிய அரசின் சட்டத்திற்கு எதிராகக் கடும் வாதங்களை முன்வைத்தனர். சுய-அடையாள உரிமையைப் பறிக்கும் சட்டம்: திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், “இந்த மசோதா மாற்றுப்பாலினத்தவர்களின் சுய- அடையாளத்திற்கான அடிப்படை உரிமை யைப் பறிக்கிறது. பாலினத்தை உறுதி செய்ய ஒரு மருத்துவக் குழுவின் முன் கையேந்தி நிற்கும் நிலையை இது உருவாக்குகிறது. இது மாற்றுப்பாலினத்தவர்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் செயல்” என்று சாடினார்.
மேலும், மசோதாவில் உள்ள குளறுபடிகளை நீக்க இதனை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே, மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் சமூகப் புறக் கணிப்பைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கி னார். “இந்தியாவில் 31% மாற்றுப்பாலினத் தவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
அவர்களில் 50% பேர் 20 வயதுக்குட்பட்ட வர்கள். ஏற்கெனவே கடுமையான சமூகப் பாகு பாடுகளைச் சந்தித்து வரும் விளிம்புநிலை மக்க ளுக்கு ஆதரவளிக்காமல், புதிய சட்டத்தின் மூலம் அரசு அவர்களை மேலும் ஒடுக்கப் பார்க்கிறது” என்று குற்றம்சாட்டினார். இந்த மசோதாவில் மாற்றுப்பாலினத் தவர்களுக்கான திருமணம், தத்தெடுத்தல், விவாகரத்து அல்லது சொத்து வாரிசுரிமை போன்ற சிவில் உரிமைகள் குறித்து எந்த ஒரு வார்த்தையும் இல்லை.
சாதி, வறுமை, ஊனம் போன்ற பலமுனைப் பாகுபாடுகளை எதிர் கொள்ளும் விளிம்புநிலை மாற்றுப்பாலினத் தவர்களைப் பாதுகாக்கும் எவ்விதத் திட்டங் களும் இதில் இல்லை. மொத்தத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளை அப் பட்டமாக மீறும் வகையில் இந்த மசோதா அமைந் துள்ளதாக டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எம்பி மற்றும் இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிகத் தெளி வாக வாதிட்டுள்ளனர். விளிம்புநிலை மக்க ளின் கண்ணியத்தைப் பறிக்கும் இத்தகைய சட்டங் களை அவசர அவசரமாக நிறைவேற்றுவது, ஜனநாயகத்தின் மாண்பைக் குலைக்கும் கடும் தாக்குதல் ஆகும்.
