tamilnadu

img

கியூபாவின் கழுத்தை நெரிக்கும் அமெ. ஏகாதிபத்தியப் போக்கிற்கு உலகளாவிய கண்டனம் எழட்டும்!

கியூபாவின் கழுத்தை நெரிக்கும் அமெ. ஏகாதிபத்தியப் போக்கிற்கு உலகளாவிய கண்டனம் எழட்டும்!

ஈரான் மீது அமெரிக்காவும் அதன் மேற்கு ஆசியக் கூட்டாளியான இஸ்ரேலும் தொடுத்துள்ள கொடூரமான தாக்கு தல்களின் தாக்கத்தை உலகம் உணர்ந்து வரும் வேளையில், அதே போன்ற மற்றொரு கொடூர மான ஏகாதிபத்தியச் செயல் கரீபியன் கடற் பகுதியில் எவ்வித கவனமும் ஈர்க்கப்படாமல் அரங்கேறி வருகிறது.

கியூபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முடக்கியுள்ளது. கியூபாவை ஸ்தம்பிக்க வைக்கும் அமெரிக்காவின் தடைகள் வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்குச் செல்லும் எண்ணெய் கப்பல்களைத் தடுத்து நிறுத்துவது, கியூபாவுக்கு எரிபொருள் வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் அபராத வரிகள் விதிக்கப்படும் என அச்சுறுத்துவது மற்றும் ரஷ்யாவின் டீசல் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தைத் தடுப்பது என டிசம்பர் 2025 முதல் அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒரு நாட்டின் கழுத்தை நெரிப்பதாக அமைந்துள்ளன. கியூபாவின் மின் உற்பத்தியில் 83% எண் ண்ணெய்யைச் சார்ந்தே உள்ளது.

அமெரிக்கா வின் இந்தத் தடைகளால் பெட்ரோலியத்தைச் சார்ந்திருக்கும் கியூபா நிலைகுலைந்துள்ளது. இதன் விளைவுகள் பேரழிவைத் தந்துள்ளன. 2026 மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை அந்நாட்டின் மின் தொகுப்புக் கட்டமைப்பு (Grid) முழுமையாக முடங்கியுள்ளது. தலைநகர் ஹவானா உள்ளிட்ட நகரங்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன, அழு கக்கூடிய உணவுப் பொருட்கள் வீணா கின்றன. தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலு வலகங்கள் மூடப்பட்டுள்ளன.

டொனால்டு டிரம்ப்பின் இந்த நடவடிக்கை கள் சர்வதேச சட்டங்களின்படி கிரிமினல் குற்ற மாகும். கியூபா “முடிவை எதிர்நோக்குகிறது” என்றும், கியூபாவைத் தன்பிடிக்குள் கொண்டு வரும் “கௌரவம்” தனக்குக் கிடைக்கும் என்றும் டிரம்ப் பெருமையாகக் கூறி வரு கிறார். மேலும், எந்த நிபந்தனைகளையும் குறிப்பிடாமல் “காலம் கடந்து போவதற்குள் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்று கியூப அரசை அவர் மிரட்டுகிறார். 60 ஆண்டு கால  பொருளாதாரத் தடை 1960-களின் தொடக்கத்தில் அமெரிக்க நிறுவனங்களை கியூப அரசு தேசியமய மாக்கியதில் இருந்தே, அமெரிக்கா அதன் மீது 60 ஆண்டு காலமாக பொருளாதாரத் தடையை (கியூப மக்கள் இதனை ‘முற்றுகை’ என்கின்ற னர்) விதித்துள்ளது.

1962-இல் விதிக்கப்பட்ட இந்த வர்த்தகத் தடை, 1996-ஆம் ஆண்டின் ஹெல்ம்ஸ்-பர்டன் சட்டத்தின் மூலம் மேலும் தீவிரமாக்கப்பட்டு உலக வர்த்தகச் சமூகத்தையும் இதைப் பின்பற்றுமாறு அமெரிக்கா கட்டாயப்படுத்தியது. இதற்கிடையில், கியூபாவை பயங்கர வாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடாக அமெ ரிக்கா அறிவித்தது. பாரக் ஒபாமா ஆட்சி யில் நீக்கப்பட்ட இந்த அறிவிப்பை டொனால்டு டிரம்ப் மீண்டும் கொண்டு வந்தார். இதனால் கியூபா சர்வதேச வங்கிச் சேவை களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்போருக்குப் பிறகும் இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்வது, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்காக அல்ல.

மாறாக, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான புளோரி டாவின் வலதுசாரி கியூப-அமெரிக்க சமூ கத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே ஆகும். ஹவானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது மார்கோ ரூபியோவின் வாழ்நாள் லட்சியமாகும். வெனிசுலாவில் டொனால்டு டிரம்ப்பின் ராணுவத் தலையீடு (அங்கு பதவியில் உள்ள ஜனாதிபதியைக் கைது செய்தது மற்றும் எண்ணெய்யைக் கைப்பற்றிய உட்பட), கியூ பாவின் முதன்மை எரிபொருள் விநியோ கத்தைத் துண்டிப்பதற்காகவே திட்டமிடப் பட்டது. வெனிசுலாவில் டிரம்ப் நடவடிக்கை க்கு உரிய தண்டனை கிடைக்காத நிலை, கியூபாவின் கழுத்தை நெரிக்க டிரம்ப் நிர்வா கத்திற்குத் துணிச்சலை அளித்துள்ளது.

ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் போருக்கு இணையாகவே கியூபாவில் நடக்கும் அடக்குமுறைகளும் அரங்கேறி வருகின்றன. உலக நாடுகளின்  மௌனம் கலைய வேண்டும் எதிர்ப்புக்கு உட்படாத ஒவ்வொரு ஏகாதி பத்திய அத்துமீறலும், அடுத்தடுத்த அத்து மீறல்களை இயல்பாக்கி விடுகின்றன. இது அமெரிக்காவின் பிடியில் உள்ள பலவீன மான நாடுகளுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச ஒழுங்கமைப்பின் கட்டமைப்புக்கே அச் சுறுத்தலாக முடிகிறது. இந்தியா உட்பட ஒட்டுமொத்த உலகமும் இதற்கு எதிராக மௌனமாக இருக்கக் கூடாது.

இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய துணிச்சல் உலக நாடுக ளுக்குத் தேவை. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவோடு கியூப மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டும். தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம் - 26.3.26 தமிழில் : ராஜூபாய்