புதுச்சேரியில் ‘சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பு
புதுச்சேரி, மார்ச் 29- புதுச்சேரி சட்டப்பேர வைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். லாஸ்பேட்டை லாஸ்பேட்டை தொகுதி யில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.ராஜாங்கம் தொகுதிக்குட்பட்ட மகாவீரர் நகரில் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று ‘சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன், சத்தியா, நகரக் கமிட்டி செயலாளர் ராம்ஜி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, சரவணன், ஆனந்த், ஜோதிபாசு மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஹரி கிருஷ்ணன், மணிமாறன், சுரேஷ், நிலவழகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். திருபுவனை திருபுவனை தொகுதி யில் போட்டியிடும் வேட்பா ளர் மா.தட்சிணாமூர்த்தி, தொகுதிக்கு உட்பட்ட திருவண்டார்கோவில் பகுதி யில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பி னர் சீனுவாசன், மண்ணாடிப் பட்டு கமிட்டி செயலாளர் அன்புமணி, மாநிலக் குழு உறுப்பினர்கள் சங்கர், மதிவாணன், ரமேஷ், உமா உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.
