இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா 40% சரிவு மேற்கு ஆசியப் போர் பதற்றமே காரணம்
புதுதில்லி மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரண மாக, இந்தியாவின் மருத் துவச் சுற்றுலாத் துறை பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. வெளி நாட்டு நோயாளிகளின் வருகை 30% முதல் 40% வரை குறைந்துள்ள தாகத் தொழில்முறை அறிக்கை கள் மூலம் செய்திகள் வெளியா கியுள்ளன. இது தொடர்பான தொழில்முறை அறிக்கைகளில், தில்லி என்சிஆர் மற்றும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய மருத்துவ மையங்களில் மருத்து வச் சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாய் கணிசமாகக் குறைந்துள் ளது. அதாவது மாதாந்திர வரு வாயில் 15% முதல் 20% வரை சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு ஆசிய நாடு களிலிருந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 75% வரை வீழ்ச்சி யடைந்துள்ளது. இதயம், புற்று நோய், எலும்பு சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச் சைக்காக 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமாக வரும் நோயா ளிகள், விமான ரத்து மற்றும் விசா தாமதங்களால் வர முடியாமல் தவிக்கின்றனர். விமானப் போக்கு வரத்து சில பகுதிகளில் தொடங்கினா லும், கட்டணங்கள் 15% முதல் 25% வரை உயர்ந்துள்ளது நோயாளி களுக்குப் பெரும் சுமையாக மாறி யுள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் இருந்த நிலையை விட, மார்ச் மாதத்தின் முதல் 10 நாட்களில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் நோயாளி களின் வருகை கடுமையாக வீழ்த் துள்ளதாகத் துறை சார்ந்த வல்லு நர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
