எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க 6,000 பிஎன்ஜி நுகர்வோர்கள் எல்பிஜி இணைப்புகளை ஒப்படைத்தனர்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளைச் சமாளிக்கும் வகையில், குழாய் மூலம் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) பெறும் சுமார் 6,000 நுகர்வோர் கள் தங்களது எல்பிஜி (சிலிண்டர்) இணைப்புகளைத் தானாக முன்வந்து ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய பெட்ரோலி யம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்ச கத்தின் செயலாளர் நீரஜ் மிட்டல் கூறுகை யில்,”சனிக்கிழமை வரை 6,000 பிஎன்ஜி பயனாளர்கள் தங்களது சிலிண்டர் இணைப்புகளை விட்டுக்கொடுத்துள்ள னர். பிஎன்ஜி வசதி இல்லாத வீடுகளுக்கு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய மற்றவர்களும் இதேபோல் முன்வர வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத் துள்ளார். பிஎன்ஜி என்றால் என்ன? பிஎன்ஜி என்பது வீடுகளுக்குச் சிலிண் டர்கள் மூலம் வரும் எல்பிஜி வாயுவுக்குப் பதிலாக, குடிநீர் இணைப்பு வருவது போலவே தரைக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் நேரடியாக உங்கள் சமையலறைக்கே வரும் இயற்கை எரி வாயு இதுவாகும். இதில் பெரும்பாலும் மீத்தேன் வாயு இருக்கும் என்பது குறிப்பி டத்தக்கது.
சவூதி இளவரசருடன் பிரதமர் மோடி
ஆலோசனை மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் குறித்து பிரதமர் மோடி, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன் சனிக்கிழமை இரவு தொலைபேசி வாயிலாக விரிவாக ஆலோ சனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, சர்வ தேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் கப்பல் போக்கு வரத்து தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசி யத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தி னர். குறிப்பாக, செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் நிலவும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அசாமில் அமித் ஷா வெறுப்புப் பேச்சு
தேகியாஜுலி அசாம் மாநிலம் தேகியாஜுலி பகுதியில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசு கையில், ”ஊடுருவல்காரர்களைப் (முஸ்லிம் மக்களை மறைமுகமாக) பாதுகாப்பதற்காகவே ராகுல் காந்தி யும் அவரது குழுவினரும், கூட்டணிக் கட்சியினரும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (எஸ்ஐஆர்) எதிர்க்கின்ற னர். அசாமில் ஊடுருவலைத் தடுப்பது மட்டும் போதாது. அங்கிருக்கும் ஒவ் வொரு சட்டவிரோதக் குடியேறியும் அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.