states

img

முஸ்லிம் மாணவரை ‘பயங்கரவாதி’ என அழைத்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

முஸ்லிம் மாணவரை ‘பயங்கரவாதி’ என அழைத்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

பெங்களூரு கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகமான, பிஇஎஸ் (PES)  பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முரளிதர் தேஷ்பாண்டே என்பவர் மார்ச் 24 அன்று வகுப்பறையில் பாடம்  எடுத்துக் கொண்டிருந்த போது முஸ் லிம் மாணவரை ‘பயங்கரவாதி’ என அழைத்து அடாவடியில் ஈடுபட்டார்.  முஸ்லிம் மாணவரை நோக்கி  முரளிதர் தேஷ்பாண்டே,”வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது நீ  தொந்தரவு செய்கிறாய். இன்று இங்கே  அமைதியாக இருக்கும் என்று நினைத்தேன். உனக்கு வெட்கமாக இல்லையா? உருப்படாதவனே, பயங்  கரவாதி! உன்னை நான் பயங்கரவாதி என்றுதான் அழைப்பேன்” என 13 முறை பயங்கரவாதி, பயங்கரவாதி என வகுப்பறையில் கத்தி கூப்பாடு போட்டார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, துணை வேந்தர் கையெழுத்திட்ட உத்தர வின்படி பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டே  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியகியுள்ளன. மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்  பட்டு, அதன் முடிவுகளின் அடிப்படை யில் இறுதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்  கப்படும் என்று பிஇஎஸ் பல்கலைக் கழக நிர்வாகம்  அறிவித்துள்ளது. மாணவர்கள் போராட்டம் முஸ்லிம் மாணவரை ‘பயங்கர வாதி’ என அழைத்த பேராசிரியர் பகி ரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ; அவரை பணியில் இருந்து நீக்க  வேண்டும் என இடதுசாரி மாணவ அமைப்புகள், எஸ்எஸ்யுஐ சார்பில்  காவல்துறையில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. அதே போல கர்நாடகாவின் பெரும்பாலான இடங்களில் மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.