tamilnadu

img

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மல்லர் கம்பம் ஏறி விழிப்புணர்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி  மல்லர் கம்பம் ஏறி விழிப்புணர்வு 

தஞ்சாவூர், மார்ச் 29 -  தஞ்சாவூர் மாநகராட்சி சிவகங்கை பூங்காவில் ஆதித்தன் குழுவினரின் ‘மல்லர் கம்பம்’ உடல் வித்தை மூலம் தனித்துவமான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்வை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை பூங்காவிற்கு வந்த பொதுமக்களிடையே, மல்லர்  கம்பம் வீரர்கள் தங்களின் மெய்சிலிர்க்க  வைக்கும் உடல் வித்தைகளை செய்து கொண்டே தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, தஞ்சாவூர்  மாவட்டத்திற்கான தேர்தல் தூதர் களான மெய்யன் மற்றும் மெய்யாள் உருவங்கள் பொறிக்கப்பட்ட பதாகை களைக் கையில் ஏந்தியவாறு அவர்கள்  செய்த உடற்பயிற்சிகள் பொதுமக்க ளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வரு வாய் கோட்டாட்சியர் நித்யா, சமூக பாது காப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்  சௌமியா, மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.