5 மாநில சட்டமன்றத் தேர்தல்களும் இடதுசாரிகளும்
கேரளம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனி யன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறி விக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மதுரையில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் வரை யறுத்துள்ள இலக்குகளுக்கு இணங்க, இந்த ஐந்து இடங்களிலும் கட்சி தனது தேர்தல் உத்திகளை வகுத்துள்ளது.
கேரளம் : மக்கள் நல மாற்று அரசியல் கேரளத்தில் 2016 முதல் சிபிஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், நாடு முழுவதும் கார்ப்பரேட்-மதவாத-எதேச்சதிகார வலது சாரி மாற்றம் நிலவும் ஆபத்தான சூழலில், ஒரு வன்முறை கூட இல்லாத ஒரே மாநிலமாக கேரளம் திகழ்கிறது.
இந்தியாவில் உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், கேரளத்தின் எல்டிஎப் அரசு அந்த உரிமைகளைப் பாதுகாத்து உழைப்பாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளது. 2016 முதல் 90-க்கும் மேற்பட்ட துறைகளில் ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் புறக்க ணிக்கப்பட்ட ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்க ளின் மதிப்பூதியம் 2016-இல் ரூ.1,000லிருந்து 2026-இல் ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் (ஸ்டார்ட்-அப்கள் உட்பட) வளர்ச்சிக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் நியமனத்தில் பட்டியல் மற்றும் பிற்படுத் தப்பட்ட சமூகத்தினரை நியமித்ததன் மூலம் சமூக நீதி உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர வறுமையை ஒழித்தல், ‘லைஃப் மிஷன்’ (LIFE Mission) மூலம் 5,00,364 வீடுகள் வழங்கியது, 4,56,000 நிலமற்ற வர்களுக்குப் பட்டா வழங்கியது, 62 லட்சத்திற்கும் அதிக மான பயனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 சமூக பாது காப்பு ஓய்வூதியம், 40 லட்சத்திற்கும் அதிகமான மக்க ளுக்கு இலவச சிகிச்சை என மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் கேரளத்தில் அர்த்தமுள்ளதாக்கப் பட்டுள்ளது. பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக்கப் பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 35 முதல் 60 வயதுடைய பெண்களுக்கு ‘ஸ்திரீ சுரக்சா’ திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
‘கனெக்ட்டு ஒர்க்’ திட்டம் மூலம் இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவற்றுடன், பட்ஜெட்டுக்கு வெளியே ரூ.1,00,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கேரளத்திற் கான நிதி ஆணையத்தின் பகிர்வு 10-ஆவது நிதி ஆணை யம் ஒதுக்கிய 3.88 சதவீதத்திலிருந்து 15-ஆவது நிதி ஆணையத்தின் ஒதுக்கீடு 1.925 சதவீதமாகக் குறைந்த போதிலும் இந்த பெரும் சாதனைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் நிதி நெருக்கடிகளையும் கடன் கட்டுப்பாடுகளையும் கடந்து, கேரளத்தை அறிவு சார் பொருளாதார சமூகமாக மாற்றும் பணியில் எல்டிஎப் அரசு ஈடுபட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவி லிருந்து தப்பியவர்களின் மறுவாழ்விற்காக ஒன்றிய அரசு ஒரு பைசா கூட ஒதுக்காத நிலையிலும், மாநில அரசே பேரிடர் தாங்கு திறனுடன் புதிய நகரத்தை உருவாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் ஒருதலைப் பட்சமான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பாஜக அரசின் நவதாராளவாதக் கொள்கைகளுக்கு நேரடி மக்கள் நல மாற்றை எல்டிஎப் அரசு முன்வைத்துள் ளது.
எனவே, இந்த சாதனைகளைத் தொடர எல்டிஎப் அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்றாவது தொடர் வெற்றி பெற சிபிஐ(எம்) போராடுகிறது. மேற்கு வங்காளம்: மக்களின் குரலை மீட்பதற்கான களப்பணி அரசியல் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி, “திரிணாமுல் காங்கிரஸ் (TMC) என்பது கிரிமினல்-ஊழல்-அரசியல் கூட்டு அடிப்படையிலான ஒரு எதேச்சதிகாரக் கட்சி, அது தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் போக்குடையது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஓரங்கட்ட அது பாஜக (எதிர்) திரிணாமுல் என்ற இருமுனைப் போட்டியைத் தக்கவைக்க முயல்கிறது”.
இதன் விளைவாக, 2021 முதல் மேற்கு வங்க சட்ட மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் பொதுக் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை நிலைமைகள் கடுமையாகச் சீரழிந்துள்ளன. மக்கள் வேலை தேடி மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள னர். இடது முன்னணி ஆட்சியில் மத நல்லிணக்கத் திற்குப் பெயர் பெற்ற ஒரு மாநிலம், கடந்த 15 ஆண்டுக ளில் மீண்டும் மீண்டும் வகுப்புவாத வன்முறைகளைக் கண்டுள்ளது. மாநில அரசு தவறிய இடங்களில், சிபிஐ(எம்) வங்காள மக்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக குடிசை வாழ் மக்கள், விளிம்புநிலை மக்கள், கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்க ளுக்காகக் களத்தில் நின்றது. மேற்கு வங்காளத்தில் தற்போதைய சிறப்பு வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது கிட்டத்தட்ட 8.30 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு நேர்மாறாக, சிபிஐ(எம்) தலைமையிலான கேரளத்தில் வெறும் 3.22 சதவீத வாக்காளர்கள் மட்டுமே நீக்கப் பட்டுள்ளனர்.
மேற்கு வங்க சட்டமன்றத்தில் சிபிஐ(எம்) இல்லாததன் நிர்வாக மற்றும் அரசியல் வீழ்ச்சியை அனைவரும் பார்க்க முடிகிறது. எனவே, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தீவிரமாக முன்னெடுக்க, சட்டமன்றத்தில் சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரிகளின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டியது அவசியமாகும். தமிழ்நாடு: மதவாத வெறுப்பு அரசியலுக்கு எதிரான மதச்சார்பற்ற அரண் தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான கூட்டணி யின் ஒரு பகுதியாக சிபிஐ(எம்) போட்டியிடு கிறது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணி மதவாத விஷத்தைப் பரப்ப ஒருங்கி ணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. சமீ பத்திய உதாரணம், மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றம் மலையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி ஒரு சர்ச்சையை உருவாக்கி அரசியல் ஆதாயமடைய முயன்றதாகும். இந்த மலையில் மூன்று கோவில்கள், ஒரு தர்கா மற்றும் பல பழமையான சமணக் குகைகள் உள்ளன.
மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வின் அடையாளமாகத் திகழும் இந்தத் தலத்தை பாஜக ‘தெற்கின் அயோத்தி’ என்று முத்திரை குத்தி, வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து பதற்றத்தை உருவாக்க முயன்றது. இருப்பினும், மதுரை மற்றும் தமிழக மக்கள் மதவாத வெறுப்பு அரசியலுக்கு எதிராக உறுதியாக நின்று தமிழ்நாட்டின் பன்மைத்துவப் பாரம் பரியத்தை நிலைநிறுத்தினர். இந்த விவகாரத்தை உறுதியாகக் கையாண்ட திமுக அரசின் அணுகு முறையும் முன்மாதிரியாக இருந்தது.
“பாஜகவை உறுதியாக எதிர்க்கும் பிராந்தியக் கட்சிகளுடன் கட்சி ஒத்துழைக்கும்” என்று 24-ஆவது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி திட்டவட்டமாகக் கூறுகிறது. “பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகளைத் தனிமைப்படுத்தி தோற் கடிப்பதற்கு இந்துத்துவ சித்தாந்தத்திற்கும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கும் எதிராகத் தொடர்ச்சி யான போராட்டம் தேவை” என்றும் அதில் கூறப் பட்டுள்ளது. இந்த வகையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வென்று, மீண்டும் ஆட்சி க்கு வருவது இன்றியமையாதது. மாநில சுயாட்சிக் காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திமுக அரசு டன் இணைந்து கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவது முக்கியம்.
அவர்கள் மத்திய-மாநில உறவுகள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவை அமைத்துள் ள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் நமது தேர்தல் உத்தி “மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் கூட்டாட்சிக்காகவும் சக்திகளைத் திரட்டுவது” என்ற அர சியல் தீர்மானத்தின் அழைப்பிற்கு இணங்க உள்ளது. அசாம் : விரிவான மக்கள் கூட்டணி அசாமில் பாஜக அரசு சிறுபான்மையினரை வேட்டையாடி வருகிறது. முதலமைச்ச ரின் வகுப்புவாத வெறுப்புப்பேச்சு களுக்கு எதிராக சிபிஐ(எம்) உச்சநீதிமன்றத்தை அணுகி, எப்ஐஆர் பதிவு செய்யவும், நீதிமன்றத் தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கவும் கோரியுள்ளது.
வகுப்புவாத வெறுப்பைப் பரப்புவதன் நோக்கம், கார்ப்பரேட்டுகளு டன் நெருங்கிய கூட்டுச் சேர்ந்து பழங்குடியினரின் நிலங்கள் மற்றும் இயற்கை வளங்களைக் கைப்பற்று வதே ஆகும். தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்தும் மாநிலத்தில் பரவலான கவலைகள் உள்ளன. அசாமில் பாஜகவை வீழ்த்த விரிவான ஒற்றுமை தேவை. நமது அரசியல் நடைமுறை உத்தி யில் கூறப்பட்டுள்ளபடி, “பாஜக எதிர்ப்பு வாக்குகளை அதிகபட்சமாகத் திரட்டுவதே” அசாமில் நமது உத்தியாகும். புதுச்சேரி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கி ரஸ் தலைவர்கள் பாஜகவில் இணையும் வர லாறு உண்டு. புதுச்சேரியின் தற்போதைய முதலமைச்சர் கூட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தான், இப்போது அவர் என்டிஏ கூட்டணியில் உள்ளார். அங்கும் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதி ராக அதிகபட்ச வாக்குகளைத் திரட்டி அவர்களை ஆட்சியை விட்டு வெளியேற்றுவதே நமது முயற்சி யாக உள்ளது.
வெகுஜனப் பாதையும் போராட்டங்களும் ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணியை எதிர்த்துப் போராடுவதில் வரவிருக்கும் இந்தத் தேர்தல்கள் முக்கியமானவை. நமது கட்சியின் சுயேச்சையான வலிமையையும், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் வலிமையையும் வளர்த் தெடுப்பது முக்கியம். ஜார்க்கண்ட் முதல் ஜம்மு - காஷ்மீர் வரை மாநில அளவிலான ‘ஜன ஆக்ரோஷ் யாத்திரைகள்’ மூலம் உள்ளூர் மட்டத்திலான தொ டர்புப் பணிகளைத் தொடர்ந்து, மார்ச் 24 அன்று நடந்த ‘சலோ தில்லி - ஜன ஆக்ரோஷ் பேரணி’ உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னெ டுத்து நமது கட்சி செயல்படுத்தி வரும் ‘வெகு மக்களு டன் உயிர்ப்பு மிக்க உறவு’ என்ற பாதையை (Mass Line) அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இவை தேர்தல் யுத்தங்களுக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, நாடு முழுவதும் உள்ள கட்சித் தோழர்கள் நமது அரசியல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணி களை நிறைவேற்றவும், வகுக்கப்பட்ட அரசியல் நடை முறை உத்திகளுக்கு உண்மையாக இருக்கவும் முழு அர்ப்பணிப்புடன் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தோழர்களே, முன்னோக்கிச் செல்வோம்!
