states

img

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடம் கொள்முதல்

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடம் கொள்முதல்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவில்  சமையல் எரிவாயு தட்டுப்பாடு (எல்பிஜி) அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. சிலிண்டர் எடையைக் கூட குறைக்க பொதுத்துறை நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், எல்பிஜி தட்டுப்பாடை தவிர்க்கும் முயற்சியாக நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான இந்தி யன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corp) 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிட மிருந்து எல்பிஜி-யை வாங்க உள்ளது. இதுதொடர்பாக பூளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிடம் எல்பிஜி வாங்கும் வர்த்தகத்தின் முக்கி யத்துவம் கருதி பெயர் குறிப்பிட விரும் பாத நபர்கள், “இந்தியன் ஆயில் நிறு வனம் வாங்க உள்ள எரிவாயு சரக்குகளை பிற பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளும்” என்று தெரிவித்தனர்.  அமெரிக்கத் தடைகள் மற்றும் பிற  காரணங்களால் 2018 முதல் ஈரானிட மிருந்து இந்தியன் ஆயில்ஸ் நிறுவனம் எரிவாயு வாங்குவதை நிறுத்தி வைத்தி ருந்தது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொள்முதலை  தொடங்கி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.