states

img

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குப்பை கிடங்கில் மறுவாழ்வு

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குப்பை கிடங்கில் மறுவாழ்வு சிட்டிசன் நகரில் 120 குடும்பங்களின் அவல நிலை

அகமதாபாத் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது பிரானா. இங்கு 84 ஹெக்டேர் பரப்பளவில் மலை போல பரந்து விரிந்துள்ளது 75 மீட்டர் உயர குப்பை கிடங்கு. நகரின் பெரும்பாலான குப்பைகள் இங்குதான் கொட்டப்படுகின்றன. மருத்துவமனைகள் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளும் இங்கு குவிகின்றன. சிட்டிசன் நகருக்குச் செல்லும் சாலையின் தொடக்கத்திலிருந்து பார்த்தால், தொலைவில் கழுகுகள், பருந்துகள் மற்றும் காக்கைகள் வட்டமிடுவதைக் காணலாம். 2023 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, இங்கு 12.5 மில்லியன் டன் குப்பைகள் உள்ளன. இந்த குப்பை மலையின் பல பகுதிகளில் தொடர்ந்து புகைந்துகொண்டே இருக்கிறது. தண்ணீர் வசதி இல்லை இந்நிலையில், குஜராத் இனப்படுகொலை யில் அனைத்தையும் இழந்த மற்றும் பாதிக் கப்பட்டவர்களுக்கு 75 மீட்டர் உயர குப்பை கிடங்கு பகுதியில் தான் மறுவாழ்வு அளித் துள்ளது அம்மாநில பாஜக அரசு. கடந்த 22 ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் 120 முஸ் லிம் குடும்பங்களின் நிலை பரிதாபகரமானது.  இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்க ளில் பலர், நச்சு வாயுவை சுவாசித்ததாலும், கழிவு நீரைக் குடித்ததாலும் அகால மரணம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். இது அகமதாபாத் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் இருந்தாலும், இங்கு குடிநீர் விநி யோக ஏற்பாடு இல்லை. டேங்கர்களில் வரும் தண்ணீரை நம்பியே வாழ்க்கை உள்ளது. மழை  பெய்யும்போது, கழிவுநீர் குடியிருப்புப் பகுதிக ளுக்குள் பெருக்கெடுத்து ஓடுகிறது. பத்து முதல் பதினைந்து நாட்களுக்குத் தண்ணீர் இருப்ப தில்லை. அருகில் மருத்துவமனைகள் இல்லை. அருகில் பள்ளிகள் இல்லாததால், குழந்தை களின் கல்வியும் ஒரு பிரச்சனையாக உள்ளது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி பெரிய தீ விபத்து களும் வெடிப்புகளும் ஏற்படும். காற்றில் கரிய புகை சூழ்ந்திருக்கும். நுரையீரல் நோய் சிட்டிசன் நகரவாசியான ரேஷ்மா பானு கூறுகையில்,“என் கணவர் நதீம் சையத் ஐந்து  ஆண்டுகளாகப் படுக்கையில் இருந்தார். அவரது நுரையீரல் நிலை மோசமடைந்தது. அவர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவா சித்துக் கொண்டிருந்தார். கூடிய விரைவில் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மருத்து வர்கள் கூறினார்கள். ஆனால், செல்வதற்கு எங்கும் இடமில்லை. அவர் கடந்த ஆண்டு எங்க ளை விட்டுப் பிரிந்துவிட்டார்” என்று கூறினார். ஏமாற்றிய முஸ்லிம் லீக் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சில அரசியல் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன. அதன் ஒரு பகுதியாக சிட்டிசன் நகர், மெஹ்ரு நகர், மேமன் காலனி போன்றவை உருவாயின. சிட்டிசன் நகரின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள சுவரில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அதில், ‘முஸ்லிம் லீக் கேரள மாநிலக் குழு 40 வீடுகளை நன்கொ டையாக வழங்கியுள்ளதாகவும் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் சையத் முகமது அலி ஷிஹாப்தாங்கள் சாவிகளை ஒப்படைத்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் லீக் வழங்கிய 40 வீடுகளில் வசிப்ப வர்கள், ஆவணங்கள் இல்லாததால் தங்கள் வீடுகளை விற்கவோ அல்லது மாற்றவோ முடிய வில்லை. மாநகராட்சியும் பாஜகவும் குப்பைக்  கிடங்குகளிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் வசிப்பவர்களை வெளியேற்ற தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன்படி ஆவ ணங்கள் இல்லாமல், சிட்டிசன் நகர் குடியிருப்பா ளர்களால் மறுவாழ்வு மற்றும் பிற உதவி களைப் பெற முடியாத நிலை உள்ளது. தேசாபிமானியில் எம்.அகில் தமிழில்:  சி.முருகேசன்