tamilnadu

img

சிபிஐ தேர்தல் அறிக்கை வெளியீடு

சிபிஐ தேர்தல் அறிக்கை வெளியீடு 

தமிழக முன்னேற்றத்திற்கான 302 அம்ச செயல் திட்டம்

சென்னை, மார்ச் 31- தமிழகத்தின் முன்னேற்றத்திற் காக 302 அம்சங்கள் கொண்ட தேர்தல்  அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சி (சிபிஐ) வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்வில், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தேர்தல்  அறிக்கையை வெளியிட்டார். அதன்  முதல் பிரதியை மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி பெற்றுக்  கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் மக்க ளைப் பிளவுபடுத்தும் மதவெறி அரசியலை முன்னெடுத்து வருகிறது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் சிறு, குறு தொழில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.  பொதுத் துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதே இந்த அரசின் வாடிக்கை யாக உள்ளது. தேசியக் கல்விக்  கொள்கை மற்றும் நீட் தேர்வு  மூலம் கல்வியை வணிகமயமாக்கு வதையும், இந்தி-சமஸ்கிருதத் திணிப் பையும் சிபிஐ கடுமையாக எதிர்க்கிறது. மாநில உரிமைகள் மீட்பு தமிழகத்தின் சமூக அமைதியைச்  சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. மாநிலத்திற்கு வழங்க வேண்டிய வரிப் பங்கு மற்றும் பேரிடர் நிவா ரணத் தொகையை வழங்க மறுப்ப தோடு, ஆளுநரைப் பயன்படுத்தி சட்டமன்ற நடவடிக்கைகளை முடக்கி  ‘போட்டி அரசு’ நடத்தி வருகிறது. தமி ழகத்தைப் பாதுகாக்க ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ மட்டுமே சரியான தேர்வாகும். அதிமுக இப் போது பாஜகவின் ஆர்எஸ்எஸ் ஜோதியோடு ஐக்கியமாகிவிட்டது. முக்கிய வாக்குறுதிகள் * ஊரக வேலை உறுதித் திட்டத்தை  மேம்படுத்தி, ஆண்டுக்கு 200 நாட்கள்  வேலையும், ரூ.700 தினசரி ஊதிய மும் வழங்கப் போராடுவோம். * லோக் ஆயுக்தா சட்டத்தைச் சீர மைத்தல், உபா (UAPA) போன்ற கொடூரச் சட்டங்களை நீக்க வலியு றுத்துதல் மற்றும் சிஏஏ சட்டத்தைத் தமிழகத்தில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். * விகிதாச்சாரப் பிரதிநிதித்து வம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள்,  மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக  உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடு வோம். * மீனவர், நெசவாளர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் மற்றும்  மூத்த குடிமக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தத் தனித்துவமான திட்டங்கள் வலியுறுத்தப்படும். * கல்வி மற்றும் மருத்துவ வசதி களை விரிவாக்குதல், ‘நடந்தாய்  வாழி காவேரி’ திட்டத்தைச் செயல் படுத்துதல் மற்றும் பட்டாசுத் தொழி லைப் பாதுகாத்தல் உள்ளிட்ட 302  அம்சச் செயல் திட்டங்கள் அறிக்கை யில் இடம்பெற்றுள்ளன. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வும், தமிழக நலன்களை மீட்கவும் ‘கதிர் அரிவாள்’ சின்னத்திற்கு வாக்க ளித்து வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு மக்களைக் கேட்டுக்  கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.  இந்நிகழ்வில் டி.எம்.மூர்த்தி, வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.