world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உடனடி போர் நிறுத்தம் : ஐ.நா வலியுறுத்தல்

ஹிஸ்புல்லா-இஸ்ரேலுக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்பும்  உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என லெபனானுக்கான ஐ.நா சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜினின் ஹென்னிஸ்-பிளாஷார்ட் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மோதல் நீடித்தால் லெபனானின் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகட்ட முடியாத சேதம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலால் சுகாதாரப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், போரில் ஈடுபடாத லெபனான் ராணுவ வீரர்கள் என சுமார் 1,247 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கத் தூதரகம் : வெனிசுலாவில் திறப்பு

வெனிசுலாவின் தலைநகரில் அமெரிக்கத் தூதரகம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது வெனிசுலாவுடனான எங்களது உறவில் ஒரு புதிய அத்தியாயம். தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம், அங்குள்ள இடைக்கால அரசு, சிவில் சமூகம், தனியார் நிறுவனங்க ளுடன் நேரடித் தொடர்புகளை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்திய பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வெனிசுலா அரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 ரஷ்யாவுடன் ஒப்பந்த நீட்டிப்பு : செர்பியா அறிவிப்பு

 ரஷ்யாவுடனான இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க செர்பியா ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிக் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடனான தொலைபேசி வாயிலாக உரையாடிய அவர், அனைத்துத் துறைகள் குறித்து விவாதித்த தாகவும், பிறகு எரிவாயு ஒப்பந்தத்தை நீட்டித்ததாகவும் கூறினார். செர்பியா தனது தேவைகளுக்கு குறைந்த விலையில், சாதகமான விதிமுறைகளின் கீழ் எரிசக்தி வாங்குவதற்கு ரஷ்யாவையே பெரிதும் நம்பியுள்ளது.  

அமெ., போர் விமானங்கள் இறங்க இத்தாலியும் அனுமதி  மறுப்பு

ஈரானை தாக்க மேற்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படும் அமெரிக்க ராணுவ விமானங்களை தன் நாட்டில் தரையிறங்க இத்தாலி அனுமதி மறுத்துள்ளது. அமெரிக்காவின் சில குண்டுவீச்சு விமானங்கள் (Bombers) மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் வழியில் கிழக்கு சிசிலியில் உள்ள இந்தத் தளத்தில் தரை யிறங்கத் திட்டமிட்டிருந்தன.  இந்நிலையில் இத்தாலி அனுமதி மறுத்துள்ளதாக ‘கொரியர் டெல்லா செரா’ நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. இத்தாலியின்  எதிர்க்கட்சிகள், ஈரான் மீதான போரில் அமெரிக்காவுக்கு இத்தாலி உதவக்கூடாது என அழுத்தம் கொடுத்த நிலையில் இம்முடிவை நோக்கி அந்நாட்டு அரசு நகர்ந்துள்ளது.

பேட்டரி தொழில்நுட்பம் : இலங்கை முடிவு    

சூரிய சக்தியை சேமித்து வைக்கும் பேட்டரி தொழில்நுட்பத்தை அவசரமாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசு  முடிவெடுத்துள்ளது.  உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் எரிபொருள்மற்றும் மின்சாரக் கட்டணங்கள் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் சூரிய சக்தியை சேமித்து வைக்கும்பேட்டரி கட்டமைப்பு மற்றும் புதிய நீர்மின் திட்டங்களை அவசரமாக அமைப்பதற்கான திட்டங்களை செவ்வாயன்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. 

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் சட்டம் மது குடித்து அமைச்சர்கள் கொண்டாடி மகிழ்ந்த கொடூரம்

டெல்அவிவ், மார்ச் 31- இஸ்ரேலியர்களைக் கொன்றதா கக் குற்றம் சாட்டப்படும் பாலஸ்தீனர்க ளை இனப்படுகொலை செய்யும் வகை யில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், பாலஸ்தீனர்களைக் கொல்லும் யூத இன இஸ்ரேலியர்களுக்கு இந்தத் தண்டனை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன மக்களின் நிலங்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஆக்கிர மித்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரி விப்பவர்கள் மீது பொய்யாக கொலை,  கொலை முயற்சி, தாக்குதல் வழக்குக ளை புனைந்து கைது செய்வதை பல ஆண்டுகளாக தனிப் பணியாகவே இஸ்ரேல் செய்து வருகிறது.  இந்நிலையில் இப்புதிய சட்ட மானது கொலைக் குற்றச்சாட்டின் பேரில் பாலஸ்தீனர்களை சட்ட ரீதியாக  இனப்படுகொலை செய்ய வழி வகுக்கும் என உலகம் முழுவதும் கடும் எச்சரிக்கைகள் எழுந்துள்ளன. திங்களன்று இஸ்ரேல் நாடாளுமன் றத்தில் இந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உட்பட 62 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 48 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஒருவர் வாக்க ளிப்பில் பங்கேற்கவில்லை. அடுத்த 30 நாட்களில் இந்தச் சட்டம் நடை முறைக்கு வர உள்ளது. நேதன்யாகுவின் கூட்டணி அரசில்  இடம்பெற்றுள்ள அதி தீவிர வலதுசாரிக்கட்சியான  ‘ஓட்ச்மா யெஹூடிட்’ (யூத சக்தி) கட்சியின் தலை வர் இதாமர் பென்-கிவிர் இத்தகைய சட்டத்தை இயற்ற வேண்டும் என கடும் அழுத்தம் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.  இது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர்க்குற்றம் என்று  பாலஸ்தீன நிர்வாகம் இந்தச் சட்டத் திற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரி வித்துள்ளது.   இஸ்ரேல் ஜனநாயக நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் அமிச்சாய் கோஹன் இது குறித்து கூறுகையில், “இந்தச் சட்டத்தின் கீழ் யூதர்கள் ஒருபோதும் குற்றம் சாட்டப்பட மாட்டார்கள்”. மேலும், சர்வதேசச் சட்டப்படி இஸ்ரேல் நாடாளுமன்றம் மேற்குக்கரை பகுதி யில் சட்டங்களை இயற்ற அதிகாரம் இல்லை. எனினும் இஸ்ரேல் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்ப தையும் அவர் சுட்டிக்காட்டினார். மனித உரிமை அமைப்பான ‘பி’ட்செலெம்’ (‘B’Tselem) வெளி யிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் அரசால் பாலஸ்தீனர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து குறிப்பி ட்டுள்ளது. இஸ்ரேலால் பல பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகிற பாலஸ்தீனர்களில் சுமார் 90 சத விகிதத்தினருக்கு ராணுவ நீதிமன்றங் கள் தண்டனையை கொடுத்து விடுகின்றன. பல வழக்குகளில் பாலஸ்தீனர்களை சித்ரவதை செய்தும் கொடுமைப்படுத்தியும் மிரட்டியும்  பெறப்பட்ட “வாக்குமூலங்களின்” அடிப் படையிலேயே இந்தத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய சட்டம் பாலஸ்தீ னர்களை தூக்கிலிடுவதற்கான தீர்ப்பை வழங்க நீதிபதிகளின் ஒருமித்த முடிவு தேவையில்லை. சாதாரண பெரும்பான்மையே போதும் என்று ஏற்கெனவே இருந்த சட்டநிபந்தனை களைக் குறைத்துள்ளது. இச்சட்டம் திட்டமிட்டே பாகுபாடு காட்டுகிறது, சட்டவிரோதமானது என இந்த மசோதா நாடாளுமன்றத்தில் சட்ட மாக நிறைவேற்றப்பட்ட சில நிமிடங்களி லேயே, இஸ்ரேல் சிவில் உரிமைக் கழகம் இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.