‘ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டாலும் பரவாயில்லை’ ஈரானுடனான போரை முடிக்க டிரம்ப் விருப்பம்..!
வாஷிங்டன், மார்ச் 31 - ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டி ருந்தாலும் ஈரானுடனான போரை முடி வுக்குக் கொண்டு வர டிரம்ப் விரும்புவ தாகவும், அந்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவரது நிர்வாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு உலகின் மிக முக்கி யமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது முழுக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. தனது நட்பு நாடுகளை தவிர அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுக்கு உதவும் நாடு களின் கப்பல்களை அப்பாதை வழியாக செல்ல தடை விதித்தது. இதனால் உலகள வில் நாளுக்கு நாள் எரிசக்தி நெருக்கடி யும் பொருளாதார பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அப்பாதையை திறக்க ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக கூறிய டிரம்ப் தனது நேட்டோ கூட்டாளிகளையும் துணைக்கு அழைத்தார். வெவ்வேறு வகையில் அமெரிக்க போருக்கு உதவி செய்தாலும் முடிவற்ற போரில் நேரடி யாக சிக்குவதற்கு விரும்பாமல் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், இங்கி லாந்து என அனைத்து நாடுகளும் டிரம்ப் கோரிக்கையை நிராகரித்து விட்டன. 4 முதல் 6 வாரத்தில் ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்து விடும் என டிரம்ப் கருதிய நிலையில் ஈரானிடம் இருந்து எதிர்பார்க்காத பதிலடித் தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்கொண்டு வருகின்றன. தனது நாட்டின் முக்கிய தலைவர்களை இழந்தாலும் அமெரிக்கா விடம் சரணடையாமல் வலுவான பதி லடியை ஈரான் கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை யைத் திறக்க வைப்போம் என்ற ஜம்பம் எடுபடாது, மாறாக, போரை அதிக நாட் களுக்கு நீட்டிக்க வேண்டியது இருக்கும் என்று டிரம்ப்பும், அவரது ஆலோசகர் களும் கருதுவதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ குறிப்பிட்டுள்ளது. ராணுவ நடவடிக்கைகளை அமெரி க்கா இன்னும் கைவிடவில்லை. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் தனது ராணுவ இருப்பை அமெரிக்கா பலப்படுத்தி வரு கிறது. அமெரிக்க கடற்படையின் திரிப் பொலி போர்க் கப்பல் மற்றும் 31-ஆவது கடற்படைப் பிரிவு அப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன. 82-ஆவது விமானப் படை வீரர்களும் அப்பகுதிக்கு சென்று சேர துவங்கியுள்ளனர். எனினும், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது இப்போதைக்கு டிரம்ப்பின் முன்னுரிமை பட்டியலில் இல் லை எனவும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கூறி யுள்ளது. அதற்கேற்ப, ஈரானின் கடற்படை, ஏவுகணை அமைப்புகள் மற்றும் அணு சக்தி கட்டமைப்புகளைக் தாக்குவதே தற்போதைய முக்கிய ராணுவ இலக்கு என்று வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்புத் துறை செயலாளர் கரோலின் லெவிட் கூறியுள்ளார்.
