மாணவ சங்கத் தியாகிகள் சோமு-செம்பு நினைவு தினம் துரைச்சாமிபுரத்தில் சோமு நினைவு இல்லம் திறப்பு
தூத்துக்குடி, மார்ச் 31 - இந்திய மாணவர் சங்கத்தின் தியாகிகள் சோமசுந்தரம்-செம்பு லிங்கம் ஆகியோரின் நினைவுதின நிகழ்ச்சி மார்ச் 31 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது ஊர்களில் நடைபெற்றது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் படித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மாண வர் சங்கத்தின் கல்லூரி தலைவர்களான சோமசுந்தரம் மற்றும் செம்புலிங்கம் ஆகியோர் 1981 ஆம் ஆண்டு ரவுடி களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது நினைவு தினம் மார்ச் 31 அன்று மாநிலம் முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது. தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள மாணவ தியாகி செம்புலிங்கம் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சங்கத்தினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். மாணவ தியாகி சோமசுந்தரத்தின் சொந்த ஊரான கே. துரைச்சாமிபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சோமு நினைவு இல்லத்தினை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிருதுளா திறந்து வைத்தார். இந்த நினைவு இல்லத்தை அவருடன் கல்லூரியில் படித்தவரும் சென்னை பொதுப் பணித்துறை செயற்பொறியா ளருமான த.தங்கராஜன் அன்பளிப்பாக கட்டிக் கொடுத்துள்ளார். மாணவத் தியாகிகள் சோமு- செம்பு படங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.அர்ஜுனன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் ஆகியோர் திறந்து வைத்தனர். முன்ன தாக சோமு இல்லத்தின் கல்வெட்டினை மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் மாடசாமி, மாவட்டச் செயலாளர் ராம்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், கு.ரவீந்தி ரன், எஸ்.அப்பாதுரை, பேச்சிமுத்து, தா. ராஜா, சண்முகராஜ், புவிராஜ், தூத்துக் குடி மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து, ஒன்றியச் செயலாளர் கே. சங்க ரன், விளாத்திகுளம் தாலுகா செயலா ளர் ஜோதி, இந்திய மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் சைலேஸ், சோமு-செம்பு அறக்கட்டளை நிர்வாகி காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
