மேற்கு ஆசிய நாடுகளில் சுரண்டப்படும் இந்தியத் தொழிலாளர்கள் ‘கஃபாலா’ முறைக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.!
புதுதில்லி, மார்ச் 31- மேற்கு ஆசிய நாடுகளில் பணிபுரியும் இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரி மைகளைப் பாதுகாக்கவும், அங்கு நிலவும் ‘கஃபாலா’ (Kafala) ஸ்பான்சர்ஷிப் முறை உள்ளிட்ட சுரண்டல்களைத் தடுக்கவும் ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
ஒப்பந்தத் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மேற்கு ஆசிய நாடுகளுடன் கையெழுத்தி டப்பட்டுள்ள இருதரப்பு தொழிலாளர் ஒப்பந் தங்கள் மற்றும் அதன் அமலாக்கத்தைக் கண்காணிக்கும் வழிமுறைகள் குறித்து ஆர்.சச்சிதானந்தம் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான குடியேற்றத்தை உறுதி செய்யப் பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழிலாளர் நல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளுடன் கூட்டுப் பணிக்குழுக்கள் (Joint Working Groups) அமைக்கப்பட்டு, தொழிலாளர்களின் குறை களைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். கஃபாலா முறையும் சுரண்டல்களும் தொழிலாளர்களைத் தங்களது முதலாளி களின் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்தி ருக்கும் ‘கஃபாலா’ முறை மூலம் ஏற்படும் சுரண்டல்கள் குறித்து இந்திய அரசு அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதா? அதன் விளைவுகள் என்ன? என ஆர்.சச்சிதானந்தம் கேள்வி எழுப்பி யிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர், கஃபாலா முறையில் அந்தந்த நாடுகள் கொண்டு வரும் சீர்திருத்தங்களை இந்தியத் தூதரகங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவ தாகவும், தொழிலாளர்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் அது குறித்து அந்நாட்டு அதிகாரிக ளிடம் பேசப்படுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, தொழிலாளர்கள் தங்களது முத லாளியின் அனுமதியின்றி வேலையை மாற்றிக்கொள்ளும் வசதி சில நாடுகளில் (எ.கா: கத்தார்) கொண்டு வரப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட உதவி மற்றும் தூதரகங்களின் பங்கு வெளிநாட்டுச் சிறைகளில் உள்ள இந்தி யர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் குறித்து ஆர்.சச்சிதானந்தம் கேட்ட கேள்வி க்கு, இந்தியத் தூதரகங்களில் உள்ளூர் வழக்கறிஞர்கள் குழுக்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், ‘Open Houses’ மற்றும் ‘Consular Camps’ மூலம் தொழிலாளர்களின் குறைகள் கேட்கப்படுவதாகவும் அரசு தெரிவித்தது. எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் சட்ட உதவி பெற்ற தொழிலாளர்களின் எண் ணிக்கை குறித்த தரவுகள் அதிர்ச்சிய ளிக்கின்றன. l கத்தார்: 2023-இல் 72 பேர், 2024-இல் 156 பேர் மற்றும் 2025-இல் 51 பேர் சட்ட உதவி பெற்றுள்ளனர்.
l ஓமன்: 2023-இல் 36 பேர், 2024-இல் 138 பேர் பயனடைந்துள்ளனர். l குவைத்: கடந்த மூன்று ஆண்டுகளில் தலா 4, 1, 4 என மிகக் குறைவான எண்ணிக்கை யிலேயே உதவி வழங்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுரண்டலுக்குள்ளாகும் நிலையில், மிகக் குறை வான எண்ணிக்கையிலான தொழிலாளர்க ளுக்கு மட்டுமே சட்ட உதவி கிடைப்பது அரசின் மெத்தனப் போக்கைக் காட்டுவதாக ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., விமர்சித்துள்ளார். ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம் இது குறித்து ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில், “மேற்கு ஆசிய நாடுகளில் இந்தியத் தொழிலாளர்கள், குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். கஃபாலா போன்ற அடிமைமுறைச் சட்டங்களால் அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிக்கப்படுவதும், ஊதியம் மறுக்கப்படுவதும் தொடர்கிறது.
இந்தியத் தூதரகங்கள் வழங்கும் சட்ட உதவி மிகக் குறைவான நபர்களையே சென்ற டைகிறது. வெறும் ஒப்பந்தங்களைப் போடுவ தோடு நிறுத்திக் கொள்ளாமல், தொழிலா ளர்களின் உரிமைகள் மீறப்படும்போது அந்த நாட்டு அரசுகளுக்கு இந்தியா கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒன்றிய அரசின் முதன்மை கடமையாகும்” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
