world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஆட்சியில் அமர்த்தியவர்களின் அரசியலை முடக்க திட்டம் மாணவர் சங்கங்களுக்குத் தடை விதிக்க நேபாள பிரதமர் முன்மொழிவு

காத்மாண்டு, மார்ச் 30-  நேபாளத்தின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள பாலேந்திர ஷா தலைமை யிலான அரசு தொழிற்சங்கங்கள், மாண வர் சங்கங்களுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.  ஆட்சியில் அமர்ந்த முதல் வாரத்தி லேயே ஜனநாயகத்திற்கு எதிரான நட வடிக்கையில் பாலேந்திர ஷா அரசு ஈடு படத் துவங்கியுள்ளது. இது அபாயகர மான போக்கு என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாலேந்திர ஷா அரசு, 100 அம்ச  நிர்வாக சீர்திருத்தத் திட்டத்தை அறி வித்துள்ளது. இதில், தொழிற்சங்கங்க ளைத் தடை செய்வது மற்றும் மாணவர் அமைப்புகளை கலைப்பது உள்ளிட்ட மிக மோசமான ஜனநாயக விரோத முடிவு கள் இடம் பெற்றுள்ளன.  மார்ச் 27 வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய அர சின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  கல்வி நிலையங்கள் மட்டுமல்லாது, அரசு நிறுவனங்களிலும் அரசியலை நீக்குவதே இந்தச் சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.  இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என அமைச்சரவை தடை விதித்துள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்களிடையே செயல்படும் தொழிற்சங்கங்களை கலைக்கவும் கூறியுள்ளது. இந்த திட்டத்தின்படி அடுத்த 90 நாட்களில் மாணவர் சங்கங்களுக்குப் பதில் அரசியல் சார்பற்ற “மாணவர் கவுன்சில்களை” (Student Councils) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் அரசியல் போராட் டங்களை வெறும் இடையூறுகளாக  மட்டுமே பார்க்கும் சூழல் உள்ளது. இதன் காரணமாக மக்கள் இந்த புதிய திட்டத்தை  வரவேற்கிறார்கள். உண்மையில் இந்த நடவடிக்கை சங்கம் அமைப்பதற்கான அரசியலமைப்பு உரிமையைப் பறிக்கி றது என்பதை அவர்கள் உணரவில்லை. இந்த நடவடிக்கை மூலமாக அரசுக்கு எதிரான போராட்டங்களை முடக்கவும், தொழிலாளர்களின் நலன்களை காவு  கொடுக்கவும் பாலேந்திரா ஷா திட்டமிடு கிறார் என கடும் விமரனங்கள் எழுந்துள்ளன. அதிகாரம் ஓரே இடத்தில் குவிவதைத் தடுக்கவும், சுரண்டலுக்கு எதிராகப் போ ராடவும் தொழிற்சங்கங்கள் அவசியம். சங்கங்களை முழுமையாக ஒழிப்பது தொழிலாளர்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஜனநாயக அமைப்பு நிலைத்திருக்க அரசியல் அறிவுள்ள குடிமக்கள் தேவை. சங்கங்கள் மூலமா கத்தான் மாணவர் பருவத்திலேயே அரசியல் புரிதல் தொடங்குகிறது. அதையே முளையிலேயே கிள்ளி எறிய இந்த அரசு முடிவு செய்துள்ளது.   மாணவர் சங்கங்களை கலைக்க முயல்வது நெருப்பில் கையை வைப்ப தற்குச் சமம். குறிப்பாக இந்த மாண வர்கள் தான் பாலேந்திரா ஷாவையும் அவரது கட்சியையும் ஆட்சியில் அமர வைத்தனர். தற்போது  இந்த அரசு அவர்களை அரசியல் ரீதியாக முடக்கப் பார்க்கிறது என இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.  இந்த அமைச்சரவை கடந்த ஆண்டு இளைஞர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை குறித்த கௌரி பகதூர் கார்கி தலைமையிலான  ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப் படுத்த முடிவு செய்தது. இதன்படி முன் னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டார்.  சர்மா ஒலி, உள்துறை அமைச்சர்  ரமேஷ் லெகாக் ஆகியோர் பதவியில் இருந்தபோது காட்டிய மெத்தனப்போக் கிற்காக அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க இந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தவிர அப்போதைய காவல்துறை தலை வர் சந்திர குபேர் காபுங் உள்ளிட்ட உயர்  அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க  ஆணைய அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

அமைதிப்படை வீரர் படுகொலை : குட்டரெஸ் கடும் கண்டனம்

லெபனான் மீது தாக்குதல் நடத்தி அதன் நிலப்பகுதியை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்து வருகிறது. இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை தாக்குவதாகக் கூறிக்கொண்டு,  மக்கள் வசிப்பிடங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசி வருகிறது. இத்தாக்குதலில்  ஐ.நா அமைதிப்படை வீரர்கள் இருந்த பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை வீசியது. அத்தாக்குதலில்   இந்தோனேசிய வீரர் ஒருவர் படுகொலை ஆகியுள்ளார்.  இச்சம்பவத்திற்கு ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கனமழை : 22 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து கட்டட இடிபாடுகளில் சிக்கி 22 பேர் உயிரி ழந்துள்ளனர் மற்றும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக ஆபத்து நீடிப்பதாகவும், சூழல் இன்னும் நிலையற்றதாகவும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

அமெ., இஸ்ரேலுக்கு அனுமதியில்லை : வான்வெளியை மூடியது ஸ்பெயின்  

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போருக்கு எதிராக உள்ள ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின். சர்வதேச சட்டத்தை மீறி ஒருதலைப்பட்சமாகத் தொடங்கப்பட்ட இந்தப் போரில் பங்கேற்பதில்லை, ஆதரவளிப்பதில்லை என அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் உறுதியாக உள்ளார். இதன் காரணமாக அந்நாடுகளின் போர் விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறப்பதற்கு தடை விதித்துள்ளார். இந்த தடை ஸ்பெயின் அண்டை நாடுகளின் ராணுவத்தலத்தில் உள்ள அமெரிக்கப் போர் விமானங்களுக்கும் பொருந்தும்.  

ஏசி மின் விளக்கு பயன்பாடு: வங்கதேசத்தில் புது கட்டுப்பாடு

 அரசு அலுவலகங்களில் மின்விளக்குகளை அணைக்கவும், குளிர்சாதன வசதியைக் (AC) குறைக்கவும் வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது. குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் மட்டுமே இருக்க வேண்டும். அத்தியாவசியமான மின்விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் ஏசி-க்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எரிபொருள் தேவையில் 95 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யும் வங்கதேசம் பெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளது.

தரை வழித்தாக்குதல் : அமெ.,வுக்கு ஈரான் எச்சரிக்கை

வெளியில் பேச்சுவார்த்தை பற்றி பேசிக்கொண்டு, ரகசியமாக தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா சதி செய்கிறது என  ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாய கர் முகமது பாகர் காலிபாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் எங்கள் தாக்குதல் தொடர்கிறது; ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. அமெரிக்கப் படைகள் தரைவழியாக வருவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்கள் வந்தால் அவர்களைத் தீக்கிரையாக்குவோம், அவர்களது பிராந்தியக் கூட்டாளிகளையும் தண்டிப்போம் என்று  எச்சரித்துள்ளார்.