states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்

பாஜகவுக்கு தைரியம் இருந்தால் தில்லியில் நவராத்திரி யின்போது பெரிய உணவகங்கள் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். ஒருபக்கம் முஸ்லிம் களுக்கு ரம்ஜான் பண்டிகைக்கான பெட்டகத்தை விநியோகித்து வரும் பாஜக, அன்றாடம் பிழைப்பை  நடத்தும் இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கேரள தலைமைச் செயலர் சாரதா முரளிதரன்

கருப்பு என்பது ஒரு நிறம். அது அழகானது. இந்த பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் உண்மை அது. கருப்பு நிறம் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ளக் கூடியது. இது மனிதகுலம் அறிந்த ஆற்றல்.

சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள்

நாட்டு மக்களை குழப்பி பிளவுபடுத்தும் முயற்சி மட்டுமே நடக்கிறது. அது தான் பாஜக அரசாங்கத்தின் முதன்மையான பணியாக உள்ளது. பிரித்தாளும் நோக்கத்துடன் நடத்தும் முயற்சியில் ஒரு நாடு எப்போதுமே மிக மோசமான அளவில் பாதிக்கப்படும்.

கர்நாடகா பாஜக எம்எல்ஏ சோமசேகரர்

நான் காங்கிரஸ் கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை. டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல, துணை முதலமைச்சர் மற்றும் பெங்களூரு வளர்ச்சி அமைச்சராக உள்ளார். எனது தொகுதி அவரது பொறுப்பில் உள்ளது. அதனால்தான் அவரை அணுகினேன். ஆனால் இதனை பாஜகவின் தேசிய தலைமை வேறு மாதிரி திசை திருப்புகிறது.