states

img

மக்களவையில்  திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

மக்களவையில்  திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொ டரின் 2ஆவது அமர்வு திங்களன்று மீண்டும் தொடங்கியது.  மக்களவையில் திவால் மற்றும் திவாலாகுதல் சட்ட (திருத்த) மசோதா,  2025 (Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2025) நிறைவேற்றப் பட்டது. மார்ச் 27 அன்று ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நீண்ட விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கடன் மற்றும் இதர பிரச்சனைகளில் நிறு வனங்கள் அல்லது தனிநபர்கள் திவாலா கும் நடைமுறைகளில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்கவே மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதா வது ஒரு நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியது உறுதி செய்யப் பட்டால், 14 நாட்களுக்குள் திவால் விண் ணப்பத்தை கட்டாயமாக ஏற்க வேண்டும் என திருத்த மசோதாவில்  கூறப்பட்டுள் ளது. மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், தொடர்ந்து திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவை யில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. திவால் சட்ட மசோதா முதன்முதலில் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் தேர்வுக் குழுவின் ஆய்வு க்கு அனுப்பப்பட்டு, டிசம்பர் 2025இல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 2016இல் நடைமுறைக்கு வந்த இந்தத் திவால்  சட்டம், இதுவரை 7 முறை திருத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.