tamilnadu

img

கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் வேட்பாளர் ராஜேந்திரன்

கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் வேட்பாளர் ராஜேந்திரன்

சேலம், மார்ச் 30- சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் முக்கிய நிர்வா கிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். தமிழகத்தில் நடைபெற உள்ள  சட்டப்பேரவை தேர்தலில், சேலம்  வடக்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தொகுதிக்குட் பட்ட பகுதிகளில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலை யில் சேலம் மாநகராட்சி  26 ஆவது வார்டுக்குட்பட்ட சாமிநாதபுரம் பகுதி யில் திமுக கூட்டணியில் உள்ள கம்யூ னிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கி ரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே திமுக அரசு நிறைவேற்றிய சாதனைகளை தெரிவித்தும், திமுக தேர்தல் அறிக்கை உள்ள முக்கிய திட்டங்களை குறித்து பேசி ஆதரவு திரட்டினார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன் குமார், விசிக மாவட்டச் செயலாளர் ராமன், திமுக மாநகர செயலாளர் ரகு பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.