tamilnadu

img

காட்பாடியில் 11-வது முறையாகப் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு

காட்பாடியில் 11-வது முறையாகப் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு

வேலூர், மார்ச் 30- காட்பாடி தொகுதியில் 11-வது முறையாகப் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செய லாளர் துரைமுருகனுக்கு, காட்பாடி ரயில் நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை யிலிருந்து ரயில் மூலம் வருகை தந்த அவர், திறந்தவெளி வாகனத்தில் பேரணி யாகச் சென்று அண்ணா, பெரியார் மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர், “திமுக தலைவரின் ஆணையை ஏற்று மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டி யிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு திரண்டுள்ள மக்களின் ஆர்வமும் எழுச்சி யும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இத்தனை முறை எனக்கு வாக்களித்த மக்கள், இந்த முறையும் பேராதரவு வழங்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தொகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துக் கேட்டபோது, அவை தேர்தல் அறிக்கையில் விரிவாக இடம்பெறும் என்று தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த விஜய் குறித்த கேள்விக்கு, “அவரை எல்லாம் நான் பெரிதாகக் கருதுவதில்லை,” என்று பதிலளித்தார். மேலும், நான்கு முனைப் போட்டி நிலவினாலும் திமுகவே வெற்றி பெறும் என்றும், தொகுதியில் செய்துள்ள பணிகள் குறித்து மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் உறுதியுடன் தெரிவித்தார்.