ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருநர் திருத்த சட்டம் 2026 ஐ திரும்ப பெற வலியுறுத்தி ஞாயிறன்று (மார்ச் 30) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ச.ஆனந்தகுமார், பகுதி நிர்வாகி ஆகாஷ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் என்.குமரன், பகுதித் தலைவர் சுந்தர்ராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பகுதி செயலாளர் டி.விஜயகுமாரி, திருநர் மக்களின் செயற்பாட்டாளர் விஸ்வராணி உள்ளிட்டோர் பேசினர்.
