tamilnadu

img

ஈஸ்வரன் வேட்பு மனுத்தாக்கல்

ஈஸ்வரன் வேட்பு மனுத்தாக்கல்

நாமக்கல், மார்ச் 30- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையாக அமைந்துள்ளது என ஈஸ்வரன் வேட்பு மனுத்தாக்கலின் போது பேட்டியளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு திங்களன்று (30.03.2026) வேட்பு மனு தாக் கல் தொடங்கியது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பா ளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான லெனின்-னிடம் தனது வேட்பு  மனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய ஈஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக கடந்த 5  ஆண்டில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, அரசு கலைக் கல்லூரி, ஐடிஐ, அறிவு சார் மையம், கண்ணகி கோட்டம், சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்தியது உள் ளிட்ட பல்வேறு, ஒருமுறை செய்யக்கூடிய முக்கிய பணி களை 45 பணிகளை செய்து முடித்துள்ளோம். தமிழக முதல் வர் வழங்கிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமை யாக அமைந்துள்ளது. எனவே எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டது, என்றார்.