tamilnadu

img

காஞ்சிபுரம், வந்தவாசியில் உதயநிதி பிரச்சாரம்

காஞ்சிபுரம், வந்தவாசியில் உதயநிதி பிரச்சாரம்

காஞ்சிபுரம்,  மார்ச் 30— திமுக இளைஞர் அணி தலைவரும் துணை முதலமைச்சருமான  உதய நிதி ஸ்டாலின் திங்களன்று (மார்ச் 30) தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத் தில் தொடங்கினார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்று அவரின் உருவ ப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இத்தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்யா சுகுமாரை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னி றுத்தி பிரச்சாரத்தில் பேசியதாவது, பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் பிரச்சாரத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி என கூறி யிருந்தார்.  மேலும் ஒன்றிய பாஜக அரசின் திட்டத்தில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை எனக்கூறிய அவர் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் கூட அதில் இல்லை என குற்றம்சாட்டி னார். திமுக அறிக்கைகளை குறிப்பிட்டு பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமை த்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப் படும், காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுப்படுத்தும் மற்றும் புதுமைப் பெண் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என நமது முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அவைகள் அனைத் தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என கூறினார். தொடர்ந்து அவர் திமுக ஆட்சியில் காஞ்சிபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது எனவும், காஞ்சிபுரத் திற்கு மாநகராட்சி அந்தஸ்து வழங்க ப்பட்டுள்ளது எனவும் கூறினார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி களை சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். வந்தவாசி திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசியில் திமுக  வேட்பாளர் எஸ்.  அம்பேத்குமாரை ஆதரித்து உதய நிதி மக்கள் வெள்ளத்தில் பிரச்சாரம் செய்தார்.