பிரதமர் மோடி வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை
மலங்கரா திருச்சபையின் தலைவர் குற்றச்சாட்டு
கோட்டயம் வெளிநாட்டுப் பங்க ளிப்பு ஒழுங்கு முறைச்சட்டத் தில்(FCRA) கொண்டுவரப்பட்ட விவாதத்துக்குரிய திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி அளித்தி ருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வில்லை என மலங்கரா ஆர்த்தடா க்ஸ் திருச்சபையின் தலைவர் பசி லியோஸ் மார்த்தோமா மேத்யூஸ்-III குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”நான் தில்லி யில் பிரதமரைச் சந்தித்து, இந்தப் பிரச்சனையை நேரில் எடுத்துரைத் தேன். சாதகமான தலையீடு செய்வ தாக அவர் உறுதியளித்த போதி லும், எந்தப் பயனும் ஏற்பட வில்லை. மலங்கரா திருச்சபையின் மூன்று முக்கிய எப்சிஆர்ஏ கணக்கு கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. இது திருச்சபையின் தொண்டுப் பணிகள் மற்றும் சமூக சேவைக ளைக் கடுமையாகப் பாதிக்கி றது. பக்தியுடன் விசுவாசிகள் வழங்கும் தர்மப் பணத்தைக்கூட சந்தேகத்துடன் பார்க்கும் அர சின் அணுகுமுறை சரியல்ல. திருச்ச பைகள் வழங்கும் விலைமதிப்பற்ற சமூக சேவைகளை நிர்வாகம் மறந்துவிடக் கூடாது. சிறுபான் மையினர் மீதான ஒன்றிய அரசின் அணுகுமுறை மாறி வருகிறதா என்ற கவலை எழுந்துள்ளது. சட்டத் தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத் தங்களை மறுபரிசீலனை செய்ய அரசு முன்வர வேண்டும். குறிப் பாக, இந்தப் பிரச்சனை குறித்து மற்ற கிறிஸ்தவ திருச்சபைகளுடன் கலந்தாலோசித்து, வலுவான எதிர்ப்புத் திட்டங்களை வகுப் பேன்” என்றும் அவர் கூறினார். ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவரின் குற்றச்சாட்டு திருச்சபை விசுவாசிகள் மற்றும் சிறுபான்மைக் குழுக்களிடையே பெரும் விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.
