states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது உள்ள 543இலிருந்து 816ஆக அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தற்போது 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்; 50% அதிகரிப்புடன் இந்த எண்ணிக்கை 120 இடங்களாக உயரும். அம்மாநிலம் மட்டும் தேவையற்ற சாதகத்தையும் செல்வாக்கையும் அளிக்கும்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா

மக்களாட்சியின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் நீதித்துறை, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. சாதாரண குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பத்திரிகையாளர் சீமா சிஷ்டி

சாதாரண மக்கள் இணையதளங்களில் பதிவிடும் கருத்துக்களை ‘செய்தியாளர்கள்’ என்ற போர்வையின் கீழ் கொண்டு வந்து, அவற்றை தணிக்கை செய்ய ஒன்றிய அரசு முயல்கிறது. இதனை ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகள் ‘மணி கண்ட்ரோல்’ தளத்திடம் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் தீபல் திரிவேதி

ஊடகமாக இருந்தாலும் சரி, விமானப் போக்குவரத்துத் துறையாக இருந்தாலும் சரி நான் ஒன்றைக் கூறுகிறேன். ஏகபோக உரிமை என்பது தொழில்துறைகளை உருவாக்குவதில்லை; மாறாக அவற்றை நெரித்துக் கொல்கிறது.