சென்னையில் வணிக சிலைண்ட விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246க்கு விற்பனையாகிறது
மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையேயான போர் காரணமாக எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் 19 கிலோ எடையுடைய வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து, ரூ.2,043 இலிருந்து ரூ.2,246 ஆக அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் 1-ஆம் தேதி 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் விலை உயர்வுகள் ஏற்பட்டுள்ளதால், வணிக வளாகங்கள் கவலை தெரிவித்துள்ளன
