tamilnadu

img

தவெக வேட்பாளர் மீது தவெகவினரே முறைகேடு குற்றச்சாட்டு!

மேட்டூர் தவெக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் அக்கட்சியினரே தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், கொளத்தூருக்கு நிர்வாகிகளை சந்திக்க வந்த தவெக வேட்பாளர்  செல்வத்தை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டடனர்.
இச்சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில்; வெளியாகாத ஜனநாயகன் திரைப்படத்திற்கு தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வாங்கி, தங்களிடமே அதிக விலைக்கு விற்றதாக மேட்டூர் செல்வம் மீது அக்கட்சியினரே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.