world

img

அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து தாக்குவோம்! ஈரான் எச்சரிக்கை!

ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து தாக்க போவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Cisco, HP, Intel, Microsoft, Apple, Google,Meta, IBM, Dell, Nvidia, JPMorgan Chase, Tesla, Boeing உள்ளிட்ட 18 அமெரிக்க நிறுவனங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தகவல் தொழில்நுட்பங்களை வழங்குவதாக ஈரான் சந்தேகிக்கும் நிலையில், இன்று தெஹ்ரான் நேரப்படி இரவு 8 மணிக்கு(இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு) இந்நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடங்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஊழியர்கள் தங்களது பாதுகாப்பிற்காக உடனடியாக பணியிடங்களை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.