tamilnadu

img

வெப்ப அலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், பல பகுதிகளில் வெப்ப அலை (Heatwave) வீசும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒடிசா, மேற்குவங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக மதிய நேரங்களில் வெளியில் செல்லாமல் இருப்பது, அதிக அளவில் தண்ணீர் குடிப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.