tamilnadu

img

ஒன்றிய உள்துறை செயலர் யார் என்றே தெரியாமல் கடிதம் எழுதிய தவெக நிவாகி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாக ஓய்வுபெற்ற உள்துறை செயலருக்கு தவெக கடிதம் எழுத்தியுள்ளது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
கடந்த மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் நடந்த தவெக தலைவர் விஜய்  பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், உள்துறை செயலர் கோவிந்த மோகன் பெயருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநர் அஜய்குமார் பல்லாவின் பெயரை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் எழுதியுள்ளார். 
ஒன்றிய உள்துறை செயலராக இருந்த அஜய் குமார் பல்லா, கடந்த 2024-ஆம் ஆண்டே ஓய்வுபெற்று, தற்போது மணிப்பூர் ஆளுநராக பதவி வகிக்கிறார். இந்த நிலையில், இணையத்தில் வெளியான இக்கடிதத்திற்கு, ஒன்றிய உள்துறை செயலர் யார் என்றே தெரியாமல் தவெக நிர்வாகி கடிதம் எழுதியுள்ளார் போன்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.