states

img

எல்.டி.எஃப்-க்கு ஆதரவாக தேஜஸ்வி பரப்புரை - நன்றி தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன்

எல்.டி.எஃப் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் தேஜஸ்விக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி, கேரளத்தில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முண்ணனி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில், நேற்று மலப்புரத்திலுள்ள பொன்னானியில் சிபிஎம் வேட்பாளர் M.K.சக்கீரை ஆதரித்து தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். இதை தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், எல்.டி.எஃப் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் தேஜஸ்விக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பினராயி விஜயன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"கேரளத்தில் எல்.டி.எஃப் (LDF) வேட்பாளர்களை ஆதரித்து, பரப்புரைகளில் கலந்துகொள்ளும் தேஜஸ்வி-க்கு நன்றி. 
உங்கள் வருகையும் ஆதரவும், நமது மதச்சார்பற்ற அடித்தளத்தை பாதுகாக்கவும், மக்கள் சார்ந்த மாற்று வழியை முன்னேற்றவும் நாம் மேற்கொள்ளும் கூட்டு போராட்டத்திற்கு வலுசேர்க்கிறது. நாம் அனைவரும் இணைந்து, கேரள மக்களின் மகத்தான வெற்றியை உறுதி செய்வோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.