tamilnadu

img

தேர்தலுக்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி? - இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே பேட்டி

தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்றால் விஜயுடன் பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம் என ஒன்றிய இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த மார்ச் 30-ஆம் தேதி நடந்த இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தேசிய தலைவரும், ஒன்றிய இணையமைச்சருமான ராம்தாஸ் அதாவலே, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  புதுச்சேரி மற்றும் அசாமில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சி இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு, ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்றால் விஜயுடன் பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றும், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.