states

img

பீகார் நாளந்தா கோவிலில் கூட்ட நெரிசல் 8 பெண்கள் உயிரிழப்பு : 5 பேர் கவலைக்கிடம்

பீகார் நாளந்தா கோவிலில் கூட்ட நெரிசல் 8 பெண்கள் உயிரிழப்பு : 5 பேர் கவலைக்கிடம் 

பாட்னா பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத் தில் உள்ளது மா ஷீத்லா கோவில். இந்த கோவிலில் (மக்ரா கிராமத் தில்) செவ்வாயன்று காலை சிறப்புப் பூஜை நடைபெற்றது. ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியதாலும், பூஜை செய்ய முன் னேறியதாலும் கோவில் வாசல் முன்பு கடும் கூட்ட நெரிசல் ஏற் பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். மயக்கம டைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் அபா யம் ஏற்பட்டுள்ளது.  நிர்வாகக் குறைபாடு கூட்ட நெரிசலை நேரில் பார்த்த நபர் கூறுகையில், “ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோவி லில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  இது வழக்கமானது தான். சைத்ரா  மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழ மை என்பதால் மார்ச் 31 அன்று வழக்கத்தை விட கூட்டம் மிக அதிகமாக இருந்தது. முறையான வரிசை அமைப்பு இல்லாததும், காவல்துறையினர் இல்லாத தும் கூட்ட நெரிசலுக்குக் காரணம் ஆகும்” என அவர் குற்றம்சாட்டினார். குடியரசுத் தலைவர் வருகையால்... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளந்தாவில் சிதிலங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளார். இதனால், மாவட்டத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரும் குடியர சுத் தலைவரின் பாதுகாப்புப் பணி களில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஷீத்லா கோவிலில் பாதுகாப்பு பற்றாக்குறை ஏற்பட்டது. கூட்ட நெரிசலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என செய்திகள் வெளியா கியுள்ளன. நிவாரணம் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல மைச்சர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் இந்த விபத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே போல உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.