states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் அவையில் உடனிருப்பதை விரும்புகி றார்கள். ஆனால் அது தற்போது நடைமுறையில் இல்லை. எதிர்க்கட்சியின் கருத்துகளை அரசு முதலில் கேட்க வேண்டும். அதன் பிறகே அரசாங்கம் தங்கள் பதிலைத் தரலாம். ஜனநாய கத்தில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு ஒன்றிய அரசு தயார் என்றால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும். அவர் பேச எழுந்தார். ஆனால் அனுமதிக்கவில்லை. இது கண்டனத்துக்குரியது.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்எல்ஏ ரோகித் பவார்

மகாராஷ்டிராவில் எண்ணற்ற வேளாண் பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு நாளும் மாநிலத்தில் 8 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். வேளாண் அமைச்சர் எதுவும் செய்யாமல், ஆன்லைன்  ரம்மி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

நாட்டில் அரசுக்கு எதிராக பேசினால் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். அதனால் நீதித்துறையிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். சட்டமன்றம், அரசியல் நிர்வாகம் மற்றும் ஊடகங்கள் போன்று நீதிபதிகளும் பொறுப்புக்கூறல் முறைக்கு உட்பட வேண்டும்.