கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு
கல்பாக்கம், நவ.11- தில்லியில் கார் குண்டு வெடிப்புச் சம்ப வத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்த தையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளை யத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வாக னங்களும் தீவிர சோத னைகளுக்குப் பிறகே உள்ளே செல்ல அனு மதிக்கப்பட்டு வருகின்றன. கல்பாக்கம் பகுதியில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அணுமின் நிலை யம் உட்படப் பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தில்லி குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்ததோடு, 25க்கும் மேற்பட்ட நபர்கள் படு காயமடைந்ததைத் தொடர்ந்து, கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலை யங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் நகரி யப் பகுதிகளில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (CISF) தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அணுமின் நிலை யங்களுக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதி களில் தமிழகக் காவல் துறையினரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடு பட்டுள்ளனர். பணிக்குச் செல்லும் மத்திய அரசு ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் அனைத்தும் சிஐஎஸ்எஃப் படையினரின் சோதனை களுக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படு கின்றன.
