tamilnadu

img

எஸ்.ஐ.ஆர்.ஐ கண்டித்து வட தமிழகம் புதுச்சேரியில் ஆவேச ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்.ஐ கண்டித்து வட தமிழகம் புதுச்சேரியில் ஆவேச ஆர்ப்பாட்டம்

 செங்கல்பட்டு,நவ.11- தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (Special Intensive Revision - SIR) திட்டத்தைக் கொண்டு வந்துள்ள ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசின் கைப்பாவை யாகச் செயல்படும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத் திற்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் க. கனகராஜ் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ்ராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் சந்திரன் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ. கோவிந்த ராஜ் (கும்மிடிப்பூண்டி), ஆ. கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), துரை. சந்திரசேகர் (பொன்னேரி), வி.ஜி. இராஜேந்திரன் (திருவள்ளூர்), சி.பி.எம். மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் டி. பன்னீர் செல்வம், ஜி. சம்பத், ஏ.ஜி. கண்ணன், ஏ.ஜி. சந்தானம், மூத்த தோழர் ப. சுந்தரராசன், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பாபு, வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி களின் தலைவர்கள் மற்றும் ஊழி யர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி  கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன் தலைமை தாங்கினார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பி னர் தா. உதயசூரியன் முன்னிலை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி. சுகந்தி, மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.எஸ். ஜெய்கணேஷ், திராவிடர் கழகம் மாவட்டத் தலைவர் கோ.ச. பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ராமசாமி, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் க. ஜெய்சங்கர், வி.சி.க. மாவட்டச் செயலாளர்கள் வேல். பழனியம்மாள், அறிவுக்கரசு, இரா. மதியழகன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே. மலையரசன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன், தி.மு.க. மாநில கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தி.மு.க. மாவட்ட அவைத் தலை வர் கே. இராமமூர்த்தி நன்றி கூறி முடித்து வைத்தார். புதுச்சேரி  புதுச்சேரி அண்ணா சிலை  எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களான தி.மு.க. மாநில அமைப்பாளர் இரா. சிவா, காங்கிரஸ் தலைவர் வெ. வைத்திலிங்கம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் மு. சலீம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத் தைகள் முதன்மைச் செயலாளர் தேவபொழிலன், சி.பி.ஐ.(எம்.எல்) பாலசுப்ரமணியன், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தலைவர் முகமது அலி ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். இதில் முன்னாள் முதல மைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முருகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி நாரா. கலைநாதன், சட்ட மன்ற உறுப்பினர்கள் நாஜிம், கென்னடி, செந்தில், சம்பத், நாக தியாகராஜன் உள்ளிட்ட முற் போக்குக் கூட்டணி கட்சித் தலை வர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர். திருவண்ணாமலை  திருவண்ணாமலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்களவை உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, ஆரணி நாடாளு மன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன், சட்டமன்ற உறுப்பி னர்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி. சர வணன், ஜோதி, அம்பேத்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவ க்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், சி.பி.ஐ. இரா. தங்கராஜ், காங்கிரஸ் கட்சி செங்கம் குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழுப்புரம்  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் லட்சு மணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.எஸ். மஸ்தான் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கழகத் துணைப் பொதுச் செயலாளர் க. பொன்முடி எம்.எல்.ஏ., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆ. சௌரிராஜன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் ரா. பெரி யார், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.  செ. புஷ்பராஜ், மகளிர் அணி எம். தேன்மொழி உட்பட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி களின் மாநில, மாவட்ட நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக  முழக்கமிட்டனர். செங்கல்பட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தி.மு.க. தலைமைத் தீர்மானக் குழுச் செயலாளர் மீ.அ. வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் ஆர். சுந்தரமூர்த்தி வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, ம.தி.மு.க. உயர்நிலைச் செயற் குழு உறுப்பினர் ஜீவன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் க. பீம்ராவ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர். ராஜா, கருணாநிதி, எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்ட பலர் உரை யாற்றினர்.