தாம்பரம் விமானப் படை நிலையத்தில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்
சென்னை, நவ.11- சென்னை தாம்ப ரம் விமானப் படை நிலை யத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.11) அன்று மாபெரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் விமரிசையாக நடை பெற்றது. இதில் சுமார் 800 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றுப் பலன் பெற்றனர். மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்ச கத்தின் கீழ் இயங்கிவரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூ தியதாரர் நலத்துறை சார்பில் நாடு முழுவதும் நவ.1 முதல் 30 வரை இந்தச் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முகாம்கள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தாம்ப ரம் விமானப் படை நிலை யமும், சென்னையில் உள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகமும் இணைந்து இம்முகாமை ஏற்பாடு செய்திருந்தன. இந்த முகாமை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத் துறை செயலாளர் வி. ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார். புதுதில்லியில் உள்ள பாதுகாப்புக் கணக்குகள் தலைமை கட்டுப்பாட்டாளர் திரு. விஸ்வஜித் சகாய், தாம்பரம் விமானப் படை நிலையத்தின் தலைவர் ஏர் கமடோர் தபன் சர்மா, சென்னை பாதுகாப்புக் கணக்கு கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முகாமில், முக அங்கீ காரத் தொழில்நுட்பம் மூலம் வருடாந்திர ஆயுள் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. நான்கு வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களின் குழுக்கள் 20 அரங்குகளை அமைத்துச் சேவைகள் வழங்கின. மேலும், நிவர்த்தி செய்யப்படாமலிருந்த ஐந்து பாதுகாப்பு ஓய்வூதி யதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறை களுக்குத் தீர்வு காணப் பட்டு, அவர்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள காசோலைகள் வழங்கப் பட்டன. தாய்நாட்டைப் பாதுகாப்பதில் உயிர்த் தியாகம் செய்த ஐந்து வீரர்களின் விதவைகளும் கவுரவிக்கப்பட்டனர்.