உதவி
10 விழுக்காடு விமானப் பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நேரங்களில் மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை இயக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே, தன்னுடைய பயணங்களைக் குறைக்கப் போவதாக மிரட்டி, இண்டிகோ நிறுவனம் “வேலை நிறுத்தம்” செய்து வருகிறது. இதில், அரசே உதவப் போகிறதா என்ற கேள்வியை விமானி கள் மற்றும் ஊழியர்கள் எழுப்புகிறார்கள். இதைக் காரணம் காட்டி ஆட்களை வெளியில் அனுப்பும் வேலையை நிறுவன நிர்வாகம் செய்யும் என்றும் அச்சப்படுகின்றனர். அதோடு, சில மாதங்கள் கழித்து, மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை என்று சொல்லி, மீண்டும் இண்டிகோ நிறுவனத்திடமே கொடுத்து விடுவார்கள் என்றும் கருத்து எழுந்திருக்கிறது.
கிண்டல்
“ஆபத்தில் ஜனநாயகம்.. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நாம் நம்ப முடியுமா? என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா” என்று தெலுங்குதேசக் கட்சித்தலைவர் ஒருவர், பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டிருக்கிறார். “காங்கிரஸ் வெளியிட்டதா” என்று அவர் எதிர்க்கேள்வி எழுப்பியிருக்கிறார். கேள்வி எழுப்பியவர், பாஜககாரரின் காதைக் கடித்திருக்கிறார். “இல்லையில்ல.. பாஜக வெளியிட்டதுதான். எழுதுனது எங்க மாநிலத்துக்காரர்தான்” என்றவுடன் இவர் பதறிப் போயிருக்கிறார். “ஏங்க... சும்மா இருக்க மாட்டீங்களா” என்று கொஞ்சம் தள்ளிப் போய் அமர்ந்து கொண்டாராம். அந்தப் புத்தகத்தை எழுதிய ஜி.வி.எல்.என்.ராவ், கடந்த ஆண்டு வரையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ஆனால் மின்னணு எந்திரம் குறித்த விவாதங்களில் மட்டும் பேசவே மாட்டாராம். அவரைப் பார்க்கும் போதெல்
லாம் கூட்டணிக்கட்சியினர் புத்தகப் பெய ரைச் சொல்லிக் கிண்டல் பண்ணுவார்களாம்.
கசிவு
வினாத்தாள்களை கசிய விட்டு, பெரும் வியாபாரமாகச் செய்து வரும் கும்பல் களின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் குமார் பிரபாத்தைக் கைது செய்திருக் கிறார்கள். 2016 ஆம் ஆண்டிலிருந்து பல் வேறு வினாத்தாள்கள் வெளியான விவ காரங்களில் பிரபாத்தின் பெயர் அடிபட்டு வந்தது. 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற பீகார் அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுக் கான வினாத்தாள்களைக் கசிய விட்டதை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறியுள் ளது. ஒவ்வொரு வினாத்தாளுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வாங்கியதாகச் சொன்னவுடன் விசாரணை அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளார்கள். பிரபாத் சிக்கியது ஒரு சிறிய பகுதிதான். இது போன்று பல கும்பல்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று தேர்வர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தேர்வு மையங்களை ஒதுக்குவது வரையிலும் இந்தக் கும்பல்கள் ஏற்பாடு செய்து தருகிறார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சிச் செய்தியாகும்.
கெஞ்சல்
“மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, லடாக் பகுதிக்கான நிதிசார்ந்த உரிமைகளை மீண்டும் தந்து விடுங்கள்” என்று கடிதங்கள் செல்கின்றன. இவற்றை எழுதுகிறவர்கள், எதிர்க்கட்சியினர் அல்ல. பாஜககாரர்களேதான் எழுதுகிறார் கள். அங்கு கிடைத்த அடி, அப்படிப்பட்ட தாகும். வெளியில் தலை காட்ட முடிய வில்லை என்று தங்கள் தில்லித் தலைமை யிடம் அலைபேசியில் புலம்புகிறார்களாம். ஏற்கெனவே, மக்கள் கொந்தளிப்பில் இருக் கிறார்கள். இதில் துணைநிலை ஆளுநரிட மிருந்தும் அதிகாரங்களைப் பறித்து, நேர டியாக ஒன்றிய உள்துறைதான் தீர்மானிக்கும் என்று திருத்தி விட்டார்கள். இப்போது ஒரு குழுவாகவே தில்லிக்குச் சென்று, கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷிடம் கொட்டியிருக்கிறார்கள். பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ பார்ப்பதற்கு வாய்ப்பெல்லாம் கிடைக்காது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் கேட்கவே இல்லையாம்.
