articles

இந்துத்துவா மிகவும் வெறித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - ச.வீரமணி

இந்துத்துவா மிகவும் வெறித்தனமாகச்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

சமீபத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களில் சில பிரிவினருக்கு அரசாங்கங் கள் இலவசங்கள் அளிப்பதைக் கைவிட வேண்டும் என்று கூறியது கடுமையான விமர்ச னத்திற்கு உள்ளானது. இதற்குப் பதிலாக அரசாங்கங் கள் நிரந்தரச் சொத்துக்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். உலகப்போ ருக்குப் பின் சோசலிஸ்ட் அரசாங்கங்கள் மக்க ளுக்காக சேமநலத் திட்டங்களை அமல்படுத்திய பின்னர்தான் உலகில் உள்ள முதலாளித்துவ ஜன நாயக அரசாங்கங்களும் அதற்கு எதிர்வினையாற்றும் விதத்தில் சேமநல நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பதை ஒருவர் நினைவுகூர்ந்திட வேண்டும்.  நவீன ஜனநாயக நாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுக ளில், சேம நல அரசு என்ற கருத்தின் மையக்கரு இதுதான்.

சமநிலைக் கொள்கை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பணப் பரிமாற்றங்கள் உருவாயின. இதில் சில சிதைவுகள் சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்டுள்ள போதிலும், அத்தகைய பணப் பரிமாற்றங்கள் பொது வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. போருக்குப் பின்னர் பல ஜனநாயக நாடுகளில் அத்தகைய பண ஒதுக்கீடுகள் அரசின் பட்ஜெட்டின் ஒரு பகுதியாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. முதலாளித்துவ அரசுகளின் அரசமைப்புச்சட்டத்திற்குள் ஆட்சி அதிகா ரம் (Executive), நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் (Legislature), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்று உறுப்புகளுக்கும் இடையே அதிகாரங்களின் தெளிவான பிரிவினை உள்ளது. இவ்வாறு அதி காரங்களைத் துல்லியமாகப் பிரிவினை செய்வது அரசமைப்புச்சட்டத்தின் ஓர் அத்தியாவசிய நட வடிக்கையாகும். ஏனெனில் இவை இந்த உறுப்புக ளுக்கிடையே ஒரு சமநிலைக் கொள்கையை உறுதி செய்கின்றன. தலைமை நீதிபதியின் எல்லை மீறல் இரண்டாம் உலகப் போரின் விளைவுகளின் பின்ன ணியில் எழுதப்பட்ட இந்திய அரசமைப்புச்சட்டம், பட்ஜெட் தயாரிப்பது என்பதை  நாடாளுமன்றம்/சட்டமன்றங்களின் பிரத்யேக அதிகாரமாக வரையறுத்திருக்கிறது.

எனினும் இது அப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசால் முன்மொழியப்பட்ட ஒப்புதலுக்கு உட்பட்டது. தேர்தல் நடைபெறும் சம யங்களில் இதுபோன்ற எதிர்கால பட்ஜெட் திட்டங்க ளுக்கு விரிவான விளக்கத்தை வழங்குவது, விவரங்கள் முன்மொழியப்படாவிட்டாலும்கூட, ஜனநாயக செயல் முறையை இது ஆழப்படுத்தி வளப்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே, இதுபோன்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் அரசாங் கத்திற்கும், நாடாளுமன்ற/சட்டமன்றங்களுக்கும் இடையே இருந்துவரும் பிரத்யேக உரிமையில் நீதித் துறை தலையிடுவது என்பது அதற்குள்ள அதிகா ரத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாகும். இவ்வாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்குள்ள அதிகார வரம்பெல்லையை மீறிவிட்டார் என்பது தெளிவா கிறது. சமநிலையைச் சீர்குலைக்கும்  மதவெறி - கார்ப்பரேட் கூட்டு இந்த நேரத்தில் நம்மை ஆளும் இந்துத்துவா மதவெறி - கார்ப்பரேட் கள்ளப்பிணைப்பின் கொள்கை திசைவழி மற்றும் தீவிர மையப்படுத்தல் கொள்கையானது, நம் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இதுநாள்வரையிலும் இருந்துவந்த அதிகார சம நிலையைச் சீர்குலைக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே, தலைமை நீதிபதியின் கருத்து அரச மைப்புத் திட்டத்தின் மீது இதேபோன்ற ஒரு பெரிய அடியை கொடுக்கிறது. இந்துத்துவா கருத்துக்க ளின் அதிகப்படியான ஊடுருவலின் விளைவாக, இது போன்ற மீறல்கள் தினந்தோறும் அனுபவமாகின்றன.

உண்மையில், இந்துத்துவா தாக்குதலின் அழுத்தங் கள் காரணமாக, குறிப்பாக ஆட்சி அதிகாரம், மற்ற இரண்டு உறுப்புகளையும் அரித்து வருகிறது. இந்த செயல்முறைதான் நீதித்துறை உட்பட அனைத்து சுயேச்சையான அரசமைப்பு நிறுவனங்களையும் பலவீனப்படுத்துவதற்கு, அல்லது சிதைப்பதற்கு வழிவகுத்திருக்கிறது. தலைமை நீதிபதியின் தற்போதைய கருத்து, வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம்  தொடர இந்திய தேர்தல் ஆணையத்தின்  முடிவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக உச்ச நீதி மன்றத்தின் வாதத்திற்கு முற்றிலும் முரணாக உள்ளது.

இன்று, வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமைப்பு மற்றும் முறையின் விளைவாக, ஆறு மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதே சங்களின் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 1 கோடியே 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.  வாக்களிக்கும் உரிமையை உச்ச நீதிமன்றமே அரசமைப்புச்சட்டத்தின் உரிமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, அரசமைப்புச் சட்ட நிறு வனங்களின் சுதந்திரத்தை அரித்துவீழ்த்திடும் செயல் முறையானது, நீதித்துறை மற்றொரு அரச மைப்புச்சட்டத்தின் கீழான  தேர்தல் ஆணையத்தின் தனிச்சிறப்பாகக் கருதப்படும் ஒரு பகுதியில் தலையிடுவதைத் தவிர்க்க வழிவகுத்திருக்கிறது. ஊடுருவல் முத்திரை குத்தல் ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கும் விதமும் முறையும், ஆட்சியில் முக்கிய தலை வராக விளங்கும் அமித் ஷாவின் நோக்கத்தை எதி ரொலிப்பதாகவே தெரிகிறது. இது ‘கண்டறிதல் (detect), நீக்குதல்(delete) மற்றும் நாடு கடத்தல் (deport)’ என்ற அதே மனநிலையை பிரதிபலிக்கி றது. வாக்காளர் பட்டியல்கள் ஊடுருவல்காரர்களால் நிரம்பியுள்ளன.

ஆவணமற்ற ஒவ்வொரு குடிமக னையும் ஊடுருவல்காரர் என்று முத்திரை குத்துவது என்பது இந்துத்துவா பிரச்சாரத்தில் பிரதிபலிக்கிறது. நாடாளுமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசமைப்புச்சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியிருப்பதன் மூலம், குடியுரிமை நிர்ணயம் என்பது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் வழி நடத்தப்படும் ஒரு பிரத்யேக செயல்முறை என்று முடிவு செய்துள்ள போதிலும் அதனையும் மீறி இது நிகழ்கிறது. இருப்பினும், வாக்காளர் பட்டியலிலிருந்து சிறப்பு தீவிர திருத்தத்தின்மூலம் வாக்காளர்களை நீக்கும் முழுச் செயல்முறையும் ஒன்றிய உள்துறை அமைச்சரின் உண்மைக்குச் சற்றும் பொருந்தாத ஊகங்களையே ஆதரிக்கிறது. தவறாகப் பயன்படுத்தப்படும்  பெயர் நீக்கல் படிவம் ‘7’ தேர்தல் ஆணையத்தின் பிடிவாத குணம் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் மறுப்பும் கவலை யளிக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறைக்குப் பரவலான எதிர்ப்பு ஏற் பட்டுள்ளபோதிலும், அரசியல் கட்சிகள் குடி மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைக் காப்பாற்ற நீதித்துறையை அணுகின.

ஆனால், எந்த வாதமோ அல்லது காரணமோ இல்லாமல், எந்தவொரு தீர்க்கமான தலையீட்டையும் ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.  குடியுரிமை நிர்ணய உரிமையைப் பறிக்க, தேர்தல் ஆணையம் முயற்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்கவில்லை. இதன் விளைவாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டபடி, வாக்காளர் பெயர்களை நீக்குவதற்கு படிவம் 7 அருவருப்பான முறையில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். விளைவு எதிர்பார்த்தது போலவே உள்ளது. பெயர் கள் விலக்கப்பட்ட ஏராளமான வாக்காளர்கள் மதச் சிறுபான்மையினராக உள்ளனர். நிராகரிக்கும் போக்கு -  சீர்குலைவை நோக்கி... இது பல்வேறு அமைப்புகளிலும் இந்துத்துவா நோக்குநிலை பரவியுள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

இதன் ஒரு தெளிவான வெளிப்பாடாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மக்களவையில் அவர் செய்த தலையீடுகளின் அடிப்படையில் தேசிய பாது காப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று நாடாளு மன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருப்ப தாகும். இது, நாடாளுமன்ற/சட்டமன்றங்களின் சுதந்தி ரமான கொள்கையையே முற்றிலுமாக நிராகரிக்கும் போக்காகும். ஏனெனில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுபவருக்கும் நம் நாடாளு மன்ற விதிகளின்படி ஒரு முக்கியமான அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இந்துத்துவா செயல்முறை, நம் அரசமை ப்புச்சட்டத்தின் அமைப்புகளின் சுயேச்சையான சுதந்திரமான செயல்பாடுகளை முற்றிலுமாகச் சீர்குலைப்பதை நோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகத்  தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒன்றிய  ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் நவ பாசிச அம்சங்க ளின் சாராம்சம் இதுதான். இது தேசத்திற்கும், மக்களுக்கும், மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசுக்கும் கொடிய அச்சுறுத்தலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இதன் கார ணமாகத்தான் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்ட நிறுவனங்கள் அனைத்தின் அதிகாரங்களும் குறைக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் எதிர் கொண்டு வருகிறோம். இது இறுதியாக நம் அரச மைப்புச்சட்டத்தின் கீழ் உள்ள அனைத்துத் திட்டங்களையுமே முற்றிலுமாக அரித்துவீழ்த்திடும்.   பிப்ரவரி 24, 2026 தமிழில்: ச.வீரமணி