tamilnadu

img

விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியான துயரம் சிபிஎம் தலையீட்டால் தலா ரூ. 30 லட்சம் நிவாரணம்!

விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியான துயரம் சிபிஎம் தலையீட்டால் தலா ரூ. 30 லட்சம் நிவாரணம்!

கோயம்புத்தூர், ஏப். 4 - கோவையில் மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் நிலையத்தில் மோட்டார் பழுதுபார்க்கும் பணியின் போது, எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் விழுந்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் சாலை அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே மாநக ராட்சிக்குச் சொந்தமான 40 அடி ஆழமுள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் தேக்கத் தொட்டி உள்ளது. இதில் ஏற்பட்ட மோட்டார் வால்வு பழுதினைச் சரிசெய்யும் பணி யில், சிவானந்தா காலனி யைச் சேர்ந்த அர்ஜுன் குமார் (38) மற்றும் பாப்பம்பட்டி பிரி வைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் சுரேஷ் (40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். பணியின் போது எதிர்பாராத விதமாக அர்ஜுன் குமார் நிலைதடுமாறி 40 அடி ஆழ தொட்டிக்குள் விழுந் தார். அவரைக் காப்பாற்ற முயன்ற சுரேஷ் குமாரும் நிலைதடுமாறி உள்ளே விழுந்துள்ளார். அப்போது, தொட்டிக்குள் இருந்த அடர் வான விஷவாயு தாக்கியதில் இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே இருவரின் உடல்களும் மீட்கப்பட்டனர். இதனிடையே, கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் அமைச் சர் செந்தில் பாலாஜி ஆகி யோர் நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். தொழிலாளர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தி யதே உயிரிழப்புக்குக் கார ணம் எனக் கூறி, கோவை அரசு மருத்துவமனை வளா கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், திராவிடத் தமிழர் கட்சி யின் தலைவர் சி. வெண்மணி தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் த. நாகராஜ், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கே. ரத்தினகுமார், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உயிரி ழந்தவர்களின் குடும்பங் களுக்குத் தலா ரூ. 30 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். கவனக்குறைவாகச் செயல் பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உப கரணங்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை முன்வைத்தனர். இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இரு குடும் பங்களுக்கும் தலா 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவை மாநகராட்சி அதி காரிகள் வழங்கினர்.  மேலும், இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை துணை ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.