tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்கள் பேரணியாகச் சென்று மனுத்தாக்கல்

சிபிஎம் வேட்பாளர்கள் பேரணியாகச் சென்று மனுத்தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி, கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், திருவொற்றியூர், கீழ்வேளூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இந்நிலையில், பழனி, பத்மநாபபுரம், திருவொற்றியூர், கீழ்வேளூர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள், சனிக்கிழமையன்று திமுக, காங்கிரஸ், சிபிஐ, மதிமுக, விசிக உள்ளிட்ட  கூட்டணியிலுள்ள 23 கட்சிகளின் தலைவர்கள் - தொண்டர்கள் புடைசூழ பேரணியாக சென்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.