திருவொற்றியூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜூக்கு மீனவர்கள் உற்சாக வரவேற்பு!
சென்னை, ஏப்.4- மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தர ராஜூக்கு மீனவ மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திரு வொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜ் பணிக்குழு பொறுப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் நெட்டுக்குப்பம், தாழங் குப்பம், முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக் குப்பம், சிவன் படை வீதி, பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். அனைத்து கிராமங்க ளிலும் பட்டாசு வெடித்து, குளிர்பானங்கள் வழங்கி வேட்பாளருக்கு உற்சாக வர வேற்பளித்தனர். மேலும் கிராம நிர்வாகிகளிடம் பேசிய வேட்பாளர், சட்ட மன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் உங்கள் கிராமங்க ளுக்கு நூலகம், மருத்துவ மனை, எண்ணூர் நெட்டுக் குப்பம் முகத்துவாரம் தூண்டில் வளைவு அமைத் தது, கொசஸ்தலை ஆறு தூர்வாரும் திட்டம், நெட்டுக் குப்பம் மீன்பிடி இறங்கு தளம், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் கடற்கரையில் வலை பின்னும் கூடம், மீன் உலர வைக்கும் கூடம் என பல்வேறு நலத்திட்ட உதவி களை செய்துள்ளார். இதுபோன்ற பணிகள் மீண்டும் தொடர அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அனைத்து கிராம நிர்வாகிகளும் நிச்சயம் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்வோம் என உறுதியளித்தனர்.
