ஆண்டிபட்டியில் திமுக வேட்பாளர் மகாராஜன் வேட்புமனு
தேனி, ஏப்.6- ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பா ளர் மகாராஜன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஆண்டிபட்டி நகரில் உள்ள திமுக கட்சி அலுவல கத்தில் இருந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். மேளதாளங்கள் முழங்க, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இதையடுத்து, ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவல கத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா விடம், வேட்பாளர் மகாராஜன் தனது வேட்புமனுவை வழங்கினார். இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ.ஆசையன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலா ளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். திமுக ஒன்றிய, பேரூர் மற்றும் பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினரான இந்திய கம்யூ னிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, விசிக உள்ளிட்ட ஏராளமான கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
