tamilnadu

img

டெல்லி எங்கள் கன்ட்ரோல் - ஆ.ராசா எம்.பி பேச்சு

டெல்லி எங்கள் கன்ட்ரோல் - ஆ.ராசா எம்.பி பேச்சு

மேட்டுப்பாளையம், ஏப்.6- டெல்லிக்கு நாங்கள் அவுட் ஆப் கன்ட்ரோல் என  தமிழக முலமைச்சர் கூறினார். ஆனால். திமுக மீண்டும்  ஆட்சி அமைத்தால் டெல்லி எங்கள் கன்ட்ரோல் என  மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற திமுக செயல் வீரர் கள் கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி பேசினார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற  தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கவிதா கல்யாணசுந்தரம் தலைமையில் மேட்டுப் பாளையத்தில் செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. ஆசிரியர் காலனி பகுதியில் திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், ”இது வழக்கமான சட்டமன்ற தேர்தல் கிடையாது, அம்பேத்கர் உருவாக்கிய இந்திய  அரசியலமைப்பை காப்பாற்ற நாம் வென்றாக வேண் டிய தேர்தல். டெல்லிக்கு அடிமையாக இருக்க முடி யாது. அதனால் தான் தமிழக முதலமைச்சர் நாம் டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என்கிறார். ஆனால்,  நான் கூறுகிறேன் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக  200 க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று மீண் டும் ஆட்சி அமைத்தால் டெல்லி எங்கள் கன்ட்ரோல்  என்றார். இதில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கி ரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக என அனைத்து கட்சிகளின் முக்கிய நிர்வாகி கள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.