tamilnadu

img

போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுத்தாக்கல்

போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுத்தாக்கல்

தேனி, ஏப்.6- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் திமுக சார்பில் போடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நல்லையாவிடம் தனது வேட்புமனுவை திங்களன்று தாக்கல் செய்தார். உடன் தங்க.தமிழ்செல்வன் எம்.பி.,  மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி நாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்  சந்திரன், சிபிஐ மாவட்டச் செயலாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர். மனுதாக்கலுக்குப் பின்பு செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: இத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். போடி  தொகுதியில் 3 முறை வெற்றி பெற்  றுள்ளேன். நான் கொடுத்த வாக்குறுதி,  மக்களின் கோரிக்கை அனைத்தையும் 99.5 சதவீதம் நிறைவேற்றி விட்டேன். அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாச மாக உள்ளது. 25 ஆண்டுகளாக அதிமுக எம்எல்ஏ வாக இருந்து, தற்போது திமுக சார்பில்  போட்டியிடுவது குறித்து செய்தியாளர் கள் கேட்டபோது, 50 ஆண்டு கால  எனது அரசியல் வரலாற்றில் பல பதவி களை வகித்துள்ளேன். பொறுப்பேற்ற பதவிக்கு ஏற்ற பணியை செய்த மன நிறைவு உள்ளது. என்மீது எந்த குற்றச்  சாட்டும் இல்லை. பழனிசாமி கட்சிக்கு  வந்த வழியும் தவறு, மக்கள் ஆதரவு டன் அவர் முதல்வராகவும் இல்லை. அவர் நன்றி உணர்வு இல்லாதவர். பதவி அளித்த சசிகலாவையே இழி வாக பேசி வருகிறார். இதுவரை அவர்  படுதோல்வியை சந்தித்து வருகிறார். கட்சியில் அவர் நிரந்த பொதுச் செய லாளரும் கிடையாது. அது உட்பட  6 வழக்குகள் நடைபெற்று கொண்டி ருக்கிறது. நானாக அதிமுகவில் இருந்து போகவில்லை. என்னை விரட்டி  விட்டார்கள். உதயகுமார், சீனிவாசன் போன்றோர் தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து என்னை அவமானப்படுத்தி துரத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.