tamilnadu

img

சிறுபான்மையினர், மீனவர் நலன்களை உறுதியாக காத்து நிற்போம்! நெல்லை, குமரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி!

சிறுபான்மையினர், மீனவர் நலன்களை உறுதியாக காத்து நிற்போம்! நெல்லை, குமரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி!

திருநெல்வேலி / நாகர்கோவில், ஏப். 4 - மதவாத பா.ஜ.க.வின் அரசியல் பண்பாட்டுப் படை யெடுப்பிலிருந்தும், சிறு பான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளிலிருந்தும் தமிழ்நாட்டைக் காக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை மீண்டும் தேர்ந் தெடுப்பதே ஒரே தீர்வு என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகிய இடங் களில் ஏப்ரல் 3 மாலை, ஏப்ரல் 4 காலை நடைபெற்ற பிரம்மாண்டமான சட்ட மன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் உரை யாற்றிய அவர், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, மீனவர் நல வாழ்வு மற்றும் அமைய விருக்கும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீதான தாக்குதல்: பாஜகவின் சதி அம்பலம் நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், கிறிஸ்தவ சமூகத்தினரையும் அவர் களது அறப்பணிகளையும் முடக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி  பங்களிப்பு சட்டத் திருத்தத் தை (FCRA) மிகக் கடுமை யாகச் சாடினார். “இந்தச் சட்டத் திருத்தம் என்பது மதச்  சுதந்திரத்தின் மீதான தாக்கு தல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனிதாபிமானப் பணிகளுக்கே எதிரானது. சிறிய தாமதங்களைச் சாக்காக வைத்துத் தொண்டு நிறுவனங்களின் அங்கீ காரத்தை ரத்து செய்து, அவர்களின் சொத்துக் களைப் பறிக்க இந்தப் பாசிசச் சட்டம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் கிறிஸ்தவப் பள்ளி கள், மருத்துவமனைகள் மற்றும் விடுதிகளை முடக்க பாஜக திட்டமிடுகிறது,” என்று குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஏற்கெனவே பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதைச் சுட் டிக்காட்டிய முதலமைச்சர், மேடையில் கிறிஸ்தவ மக்க ளைப் பாராட்டிப் பேசி விட்டுப் பின்னணியில் இத்த கைய கொடுங்கோல் சட்டங் களைக் கொண்டுவருவதே பிரதமர் மோடியின் உண்மையான முகம் என்று அம்பலப்படுத்தினார். “இந்த மசோதாவால் கேரளம், அசாம் போன்ற மாநிலங் களில் தேர்தல் நேரத்தில் பின்னடைவு ஏற்படும் என்ப தால் பாஜக இப்போது பயந்து ஒதுங்கியிருக்கிறது. ஆனால் தேர்தல் முடிந்த தும் இதைச் சட்டமாக்க அவர் கள் சதி செய்கிறார்கள். இதில் அதிமுகவின் நிலைப் பாடு என்ன? சி.ஏ.ஏ. (C.A.A.) சட்டப் பிரச்சனையில் துரோகம் செய்தது போல கிறிஸ்தவர்களுக்கும் துரோகம் செய்யப் போகிறீர்களா பழனிசாமி அவர்களே?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். குமரி மீனவர்களுக்கான வாக்குறுதிகள் மீனவர் சமூகத்தின் உற்ற தோழனாகத் திமுக அரசு விளங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், நாகர்கோவில் கூட்டத்தில் மீனவர்களுக்கான புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்தார். “இன்று காலை மீனவக் கிராமங்களுக்குச் சென்றபோது மக்கள்  முன்வைத்த கோரிக்கை களை ஏற்று, மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான வயது வரம்பு 65-லிருந்து 70-ஆக  உயர்த்தப்படுகிறது. மேலும், வாரிய உறுப்பினர்களுக்கு 70 முதல் 75 வயது வரை மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்” என்று அவர் அறிவித்தார். அதே சமயம், இலங்கை கடற்படையின் தாக்குதலி லிருந்து தமிழக மீனவர் களைக் காக்கத் தவறிய  பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைத் தோல்வியை யும் அவர் விமர்சித்தார். “மன் மோகன் சிங் ஆட்சியில் விமர்சனம் செய்த மோடி, இப்போது தான் ஒரு பலவீன மான பிரதமர் என்பதை ஒப்புக்கொள்வாரா? சிறிய அண்டை நாடுகளிடம் கூட இந்தியா செல்வாக்கை இழந்து நிற்கிறது,” என்று அவர் சாடினார். வாழ்வாதார முன்னேற்றத் திட்டங்கள் அமையவிருக்கும் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சிக் கான ‘சூப்பர் ஸ்டார்’ தேர்தல் அறிக்கையின் சிறப்பம் சங்களை முதலமைச்சர் விவ ரித்தார். மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்வு,  குடும்பத் தலைவிகளுக்கு 8,000 ரூபாய்  மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட் கள் கூப்பன், கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித்தொகை மற்றும் லேப்டாப் வழங்கும் திட்டங்கள் தமிழகத் தின் தலையெழுத்தையே மாற்றியமைக் கும் என அவர் குறிப்பிட்டார். சிறுபான்மை யின மகளிருக்குத் தொழில் தொடங்க டாம்கோ (TAMCO) மூலம் 30 லட்சம் ரூபாய்  வரை கடனுதவி வழங்கப்படும் என்றும்,  மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 12,000 ரூபாயாக உயர்த்தப் படும் என்றும் அவர் மீண்டும் உறுதி அளித்தார். கலைஞர் குறித்துப் பேசிய முதல மைச்சர், “தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்;  அவர் வாழ்ந்த காலம் வரை கோடிக்கணக் கான உடன்பிறப்புகளைத் தனது அன்பால்  கட்டிப்போட்டவர். அவரைப் பற்றிப் பேச  எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும்  கிடையாது,” என்று பதிலடி கொடுத்தார். களத்தில் நிற்கும் வெற்றி வேட்பாளர்கள் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் களைப் பெருவாரியான வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்  என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். திருநெல்வேலி மாவட்ட வேட்பா ளர்கள்: திருநெல்வேலி மாவட்டத்தில், இராதாபுரம் தொகுதியில் வெற்றி வேட்பா ளர் மு.அப்பாவு, பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அப்துல் வகாப், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் சுப்பிரமணியன் ஆகியோருக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதேபோல், நாங்கு நேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ்  கட்சியின் ரூபி மனோகரன், அம்பா சமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் வி.பி.  துரை ஆகியோருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு வலியுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்ட வேட்பா ளர்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் மகேஷுக்கும், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் ஆஸ்டினுக்கும் உதயசூரியன் சின்னத் தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத் தார். மேலும், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் ராஜேஷ் குமார், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் தாரகை கத்பர்ட்,  விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் பிரவீன் ஆகியோருக்குக் கை சின்னத்தி லும், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.செல்ல சுவாமிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். “நாம் போராடுவது தி.மு.க.வின் வெற்றிக்காக மட்டுமல்ல, இந்தியா வின் பன்முகத் தன்மையையும், சிறுபான் மையினரின் உரிமைகளையும் காக்கவே!” என்று முழங்கிய முதலமைச் சர், மீண்டும் அமையவிருக்கும் ஆட்சியில்  சாதனைகளைத் தாங்களே முறியடிக்கும் வகையில் செயல்படுவோம் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.