அமைச்சர் ஐ. பெரியசாமி வேட்புமனு தாக்கல்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 9-ஆவது முறையாகப் போட்டியிடும் அமைச்சர் ஐ. பெரியசாமி, சனிக்கிழமை காலை ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பாலசுப்பிரமணி, ரசூல் மைதீன் (காங்கிரஸ்), திமுக மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, ரெட்டியார்சத்திரம் திமுக ஒன்றிய செயலாளர் ப.க. சிவகுருசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
