இன்சூரன்ஸ் அரங்கம் சார்பில் தேர்தல் நிதி வழங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பேரவை கூட்டம் கோவையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், இன்சூரன்ஸ் அரங்கம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.5 லட்சத்தை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் இன்சூரன்ஸ் அரங்க பொறுப்பாளர்கள் வி.சுரேஷ், கே.துளசிதரன், குமார் உள்ளிட்டோர் வழங்கினர். முன்னதாக இந்த கூட்டத்திற்கு, கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
